கரோனா காலத்தில் சொந்த ஊரில் நடிகர் விமல் செய்த வேலை.. 8 மாத கர்ப்பிணி மனைவியை நெகிழ்ச்சியோடு விமல் சொன்ன வார்த்தை..! Description: கரோனா காலத்தில் சொந்த ஊரில் நடிகர் விமல் செய்த வேலை.. 8 மாத கர்ப்பிணி மனைவியை நெகிழ்ச்சியோடு விமல் சொன்ன வார்த்தை..!

கரோனா காலத்தில் சொந்த ஊரில் நடிகர் விமல் செய்த வேலை.. 8 மாத கர்ப்பிணி மனைவியை நெகிழ்ச்சியோடு விமல் சொன்ன வார்த்தை..!


கரோனா காலத்தில் சொந்த ஊரில் நடிகர் விமல் செய்த வேலை.. 8 மாத கர்ப்பிணி மனைவியை நெகிழ்ச்சியோடு விமல் சொன்ன வார்த்தை..!

தன் வெள்ளந்தியான நடிப்பினால் தமிழகத்தின் பட்டி,தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் நடிகர் விமல். ஓவியாவும், விமலும் சேர்ந்துநடித்த களவாணி திரைப்படம் ரொம்பப் பெரிய ஹிட் அடித்தது. களவாணிக்கு பின்பு பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட விமல் அந்த அளவுக்கு சோபிக்கவில்லை.

சுந்தர்சி இயக்கத்தில் சிவாவும், விமலும் சேர்ந்து நடித்த கலகலப்பு பட்டையைக் கிளப்பியது. பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான விமல், ஃஅக்‌ஷயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர் மருத்துவர் ஆவார். இப்போது கரோனா ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டில் இருக்க வலியுறுத்தி பிரபலங்கள் பலரும் தாங்கள் வீட்டில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அதில் இருந்து ஒருபடி மேலே போய்விட்டார் நடிகர் விமல்.

அவர் அப்படி என்ன செய்கிறார்? எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். திருச்சி அருகில் இருக்கும் பண்ணன்கொம்பு கிராமம்தான் நடிகர் விமலின் சொந்த ஊர். அங்கு முதுகில் கிருமிநாசினி நிரப்பிய ஸ்பிரேயரை மாட்டிவிட்டு தானே களத்தில் இறங்கிவிட்டார் நடிகர் விமல். இதைப் பார்த்து விமலை ஊரே பாராட்ட அவரோ தன் மனைவியை பாராட்டிக் கொண்டு இருக்கிறார்.

காரணம் என்ன தெரியுமா? விமலின் மனைவி அக்‌ஷயா இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த வாரம்வரை சென்னை ஓமந்தூரரர் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தார் அக்‌ஷயா. கரோனாவை காரணம்காட்டி அரசு அவருக்கு பணியில் விடுமுறை கொடுத்தது. ஆனால் அவரோ என்னால் முடிந்தவரை பணிசெய்கிறேன் என தொடர்ந்து வேலை செய்து, தன்னால் முடியாத போதே ஓய்வெடுத்தார்.’இதை நெகிழ்ச்சியோடு சொல்லுகிறார் நடிகர் விமல்.


நண்பர்களுடன் பகிர :