ஊரடங்கில் டாய்லெட் கழுவி.. பிள்ளையை குளிப்பாட்டும் பரோட்டா சூரி.. காமெடியோடு கருத்தும் சொல்லும் சூரியின் வீடியோ..! Description: ஊரடங்கில் டாய்லெட் கழுவி.. பிள்ளையை குளிப்பாட்டும் பரோட்டா சூரி.. காமெடியோடு கருத்தும் சொல்லும் சூரியின் வீடியோ..!

ஊரடங்கில் டாய்லெட் கழுவி.. பிள்ளையை குளிப்பாட்டும் பரோட்டா சூரி.. காமெடியோடு கருத்தும் சொல்லும் சூரியின் வீடியோ..!


ஊரடங்கில் டாய்லெட் கழுவி.. பிள்ளையை குளிப்பாட்டும் பரோட்டா சூரி.. காமெடியோடு கருத்தும் சொல்லும் சூரியின் வீடியோ..!

தமிழர்களுக்கு புரோட்டாவைப் பார்த்தாலே இப்போதெல்லாம் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா சூரியின் காமெடிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பரோட்டா சூரி இப்போது பேமஸ். பரோட்டா சூரி ஊரடங்கு உத்தரவால் இப்போது சூட்டிங் இல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். இதில் அவர் என்ன செய்கிறார் என அவர் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

பரோட்டா சூரி வீட்டில் செய்யும் செயல் நகைச்சுவையாக இருந்தாலும் அதில் அர்த்தம் பொதிந்த கருத்துக்களையும் சொல்கிறார் சூரி. முதலில் தன் மகனை பாத்ரூமில் குளிப்பாட்ட அவனோடு ரொம்பவே போராடுகிறார் சூரி. பாத்ரூமில் ஜட்டியோடு நிற்கும் மகனை சோப்புபோட்டு குளிப்பாட்டும் சூரி, ‘ஒரு இடத்துல நில்லுடா. ஏண்டா என்னை போட்டு கொல்லுற?’ என புலம்புகிறார். அவர் பையனைக் குளிப்பாட்ட முயலோ, அவனோ பதிலுக்கு டிரஸோடு இருக்கும் சூரியின் மேல் தண்ணீர் விடுகிறார்.

ஒருகட்டத்தில் மகனின் லொல்லை பொறுக்க முடியாத சூரி, கையெடுத்து கும்பிட்டு அய்யா மோடி அய்யா வீட்டுக்குள்ளயே இருந்தா இந்த பயபக்கிங்க நம்மளை கொன்னுடும் போலருக்கு..’என புலம்புகிறார். தொடர்ந்து தன் வீட்டில் டாய்லெட்டையும் கழுவும் சூரி, கடைசியில் அதன் மூலம் துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி சொல்லவும் செய்திருக்கிறார். குறித்த அந்த வீடியோ பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும், நல்ல கருத்தையும் சொல்கிறது.

நீங்களும் பாருங்கள்..இதோ அந்த வீடியோ..


நண்பர்களுடன் பகிர :