கரோனாவுக்கு பின் சீனாவில் 1 கோடி பேர் மாயம்..? உண்மையை மறைக்கிறதா சீன அரசு..? Description: கரோனாவுக்கு பின் சீனாவில் 1 கோடி பேர் மாயம்..? உண்மையை மறைக்கிறதா சீன அரசு..?

கரோனாவுக்கு பின் சீனாவில் 1 கோடி பேர் மாயம்..? உண்மையை மறைக்கிறதா சீன அரசு..?


கரோனாவுக்கு பின் சீனாவில் 1 கோடி பேர் மாயம்..? உண்மையை மறைக்கிறதா சீன அரசு..?

உலக அளவில் கரோனா அச்சுறுத்தல் மக்களை வெகுவாக பாதித்து வருகிறது. சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கரோனா இத்தாலி, அமெரிக்கா நாடுகளையும் உலுக்கி வருகிறது. சீனாவில் தொடங்கிய கரோனா, அந்த நாட்டை விட மற்ற நாடுகளில் அதிக உயிர் பலியை கொண்டது.

சீனா அதில் இருந்து மீண்டு விட்டது என நம்பப்படும் நிலையில் சீனாவில் ஒன்றரை கோடி பேர் எங்கே போனார்கள் என்பதே தெரியவில்லை என அதிரவைக்கும் தகவல் ஒன்றைச் சொல்லியிருக்கிறது சீனாவின் செல்போன் நிறுவனம் ஒன்று. இந்நிலையில் நியூயார்க்கில் வசிக்கும் ஜெனிபர் ஜெங் என்பவர் சில புள்ளிவிபரங்களை வெளியிட்டு இருக்கிறார். இவர் சீனாவில் உள்ள மூன்று செல்போன் விபரங்களின் புள்ளிவிபரங்கலைக் காட்டி சீனாவில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் எனக் கூறுகிறார்.

அதன்படி, சைனா மொபைல் நிறுவனம் கடந்த ஜனவரியில் மட்டும் 81 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருப்பதாகக் கூறுகிறது.இவர்கள் வேறு நெட்வொர்க் போனார்களா? அல்லது மொபைலை எடுத்துச்செல்ல முடியாத இடத்துக்குப் போனார்களா? இதேபோல் சைனா யூனிகார்ன் என்ற மொபைல் நிறுவனமும் பத்துலட்சம் வாடிக்கையாளரை இழந்திருப்பதாகக் கூறுகிறது.சைனா டெலிகம்யூனிகேசன் 5.6 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறது.

இந்த மூன்று நிறுவனங்கலும் சேர்ந்து 1.46 கோடி வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறது.சீனாவில் வைரஸ்க்கு 3270 பேர் மட்டுமே பலியானதாக சீன அரசு சொல்லிவரும் நிலையில் ஒருகோடி பேர் எங்கே போனார்கள் என்னும் கேள்வி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


நண்பர்களுடன் பகிர :