ஊரடங்கு காலத்தில் இப்படியா செய்வது.. பிக்பாஸ் வனிதாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள்..! Description: ஊரடங்கு காலத்தில் இப்படியா செய்வது.. பிக்பாஸ் வனிதாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள்..!

ஊரடங்கு காலத்தில் இப்படியா செய்வது.. பிக்பாஸ் வனிதாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள்..!


ஊரடங்கு காலத்தில் இப்படியா செய்வது..  பிக்பாஸ் வனிதாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள்..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகமானவர்களால் வெறுக்கப்பட்டவர் யார் என்று எவரிடம் கேட்டாலும், படக்கென வனிதாவின் பெயரைச் சொல்லிவிடுவார்கள். கடந்த சீசனில் கவின், லாஸ்லியா, முகின், தர்சன் என பலரும் மக்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனாலும், நெகட்டிவ் ரெஸ்பான்ஸாலேயே கோல் அடித்திருக்கிறார் வனிதா.

வனிதா முதலில் இருந்தே மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தாலும், ஏதோ ஒருவகையில் மக்களால் பேசப்பட்டுக்கொண்டே இருந்தார். அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டாவதுமுறை ரீ எண்ட்ரி ஆனபோதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். மக்கள் அவரைப் பார்த்து முகம் சுழித்தனர். ஆனால் இது எல்லாமே அவருக்கு இப்போது கை கொடுத்துள்ளது. விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பிஸியாக இருந்தார் பிக்பாஸ் புகழ் வனிதா.

இந்நிலையில் தான் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் தன் கோர முகத்தைக் காட்டத் துவங்கியது. இதனால் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் அன்றாட சீரியல்கள் கூட ரத்தானது. அதற்குப் பதிலாக திரைப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் பல பிரபலங்களும் பொதுமக்களை ஊரடங்கை கடைப்பிடித்து வீட்டுக்குள் இருக்க வலியுறுத்தி பதிவுகளைப் போட்டு வருகிறார்கள்.

ஆனால் பிக்பாஸ் புகழ் வனிதாவோ, டிவியில் தான் செய்யும் சமையல் நிகழ்ச்சிக்காக ஷாப்பிங் போயிருக்கிறார். அவர் உரிய விதியை கடைபிடித்திருந்தாலும் அதை வீடியோவாக எடுத்து தான் புதிதாக ஆரம்பித்திருக்கும் யூடியூப் சேனலில் போட்டிருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் டிவி நிகழ்ச்சிக்காக பர்சேஜ் செய்யச் செல்வது அத்தியாவசியமா? பல பிரபலங்களும் வீட்டுக்குள் இருக்க வலியுறுத்தும் நிலையில் வனிதாவின் இந்த அலப்பறை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்படுகிறது.


நண்பர்களுடன் பகிர :