கஷ்டஜீவனத்தில் வாழ்ந்து மறைந்த பரவை முனியம்மா.. அவரின் திறமையைப் பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கிய பிரபலங்கள்..! Description: கஷ்டஜீவனத்தில் வாழ்ந்து மறைந்த பரவை முனியம்மா.. அவரின் திறமையைப் பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கிய பிரபலங்கள்..!

கஷ்டஜீவனத்தில் வாழ்ந்து மறைந்த பரவை முனியம்மா.. அவரின் திறமையைப் பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கிய பிரபலங்கள்..!


கஷ்டஜீவனத்தில் வாழ்ந்து மறைந்த பரவை முனியம்மா..  அவரின் திறமையைப் பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கிய பிரபலங்கள்..!

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மாவுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. தூள் திரைப்படத்தில் சிங்கம் போல நடந்து வர்றான் செல்லப் பேராண்டி பாடலை பாடி, பாட்டி கொடுக்கும் ரியாக்சன் கவனத்தைக் குவிக்கும். அதன் மூலம் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனவர் தான் பரவை முனியம்மா.

குறித்த அந்த பாடலில் கிடைத்த புகழினால் அடுத்தடுத்து சில படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படியாக சம்பாதிக்கவில்லை பரவை முனியம்மா. அவரது கடைசி மகனும் உடல் உபாதை, மனவளர்ச்சிக் குன்றித் தவிக்க அவரையும் தன் அரவணைப்பில் வைத்து கவனித்து வந்தார் பரவை முனியம்மா. அவரது கஷ்ட சூழல் தெரிந்து ஒருமுறை நடிகர் விஷால் போய் சில உதவிகளை செய்துவந்தார்.

பரவை முனியம்மா குறித்த சுவாரஸ்யமான ஒரு தகவல்தான் இது. இதுபற்றித் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பரவை முனியம்மா, தரணி இயக்கத்தில் விக்ரம், ஜோதிகா, ரீமாசென் நடித்த ‘தூள்’ படத்தில் அறிமுகமானதோடு அதில் ஒருபாடலும் பாடியிருப்பார். இதில் ஆறுபாடல்களையும் கவிஞர் அறிவுமதி எழுத, அதில் யாரைப் பாட வைப்பது என படத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகருடன் விவாதம் நடந்தது.

அப்போது அறிவுமதிதான் ஒரு ரயில் பயணத்தில் பரவை முனியம்மாவின் பாடலைக் கேட்டேன் என சொல்லி அவரை பாடவைக்கலாம் என ஆலோசனை சொன்னார்களாம். ரிக்கார்டிங்கிற்கு பரவை முனியம்மா அழைக்கப்பட்டார். அதேநாளில் சங்கர் மகாதேவன், சுஜாதா ஆகியோர் ஆசை, ஆசை இப்போது பாடலை நான்கு டேக்கள் எடுத்து பாடி முடித்தார்களாம்.

தொடர்ந்து பரவை முனியம்மாவிடம் அவரது சிங்கம்போல பாடலுக்கான ஸ்கிரிப்டைக் கொடுத்து படித்துப் பார்த்து பாடுங்கள்: எனச்சொன்னார். ஆனால் பரவை முனியம்மாவோ எனக்கு படிக்கத் தெரியாதே எனச் சொல்லியிருக்கிறார். கூடவே பாடலை ஒருமுறை அறிவுமதியிடமே படித்துக்காட்டச் சொன்ன பரவை முனியம்மா, அதை மனப்பாடம் செய்து ஒரே டேக்கில் பாடிக்காட்ட இசையமைப்பாளர் வித்யாசாகர் உட்பட அங்கு இருந்த மொத்த திரையுலகஃப் பிரமுகர்களும் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயினர்.


நண்பர்களுடன் பகிர :