இளம்வயதில் உயிரிழந்த கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் நடிகர் சேதுராமன்.. கடைசியாக கொரோனா தொடர்பாக பேசிய வீடியோ இதுதான்..! Description: இளம்வயதில் உயிரிழந்த கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் நடிகர் சேதுராமன்.. கடைசியாக கொரோனா தொடர்பாக பேசிய வீடியோ இதுதான்..!

இளம்வயதில் உயிரிழந்த கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் நடிகர் சேதுராமன்.. கடைசியாக கொரோனா தொடர்பாக பேசிய வீடியோ இதுதான்..!


இளம்வயதில் உயிரிழந்த கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின்  நடிகர் சேதுராமன்.. கடைசியாக கொரோனா தொடர்பாக பேசிய வீடியோ இதுதான்..!

கண்ணா லட்டு திங்க ஆசையா படம் தமிழில் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்தது. பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சந்தானம் கூட்டணியில் பட்டையைக் கிளப்பிய இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர்தான் சேதுராமன். அடிப்படையில் டாக்டரான சேதுராமன் இளவயதில் திடீர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேதுராமன் கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தைத் தொடர்ந்து ஃபிவ்டி பிவ்டி, வாலிபராஜா, சக்கை போடு போடு ராஜா படங்களிலும் நடித்திருந்தார். 36 வயதான சேதுராமன் சென்னையில் தோல் நோய் மருத்துவராக இருந்தார்.திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகளே ஆன சேதுராமனுக்கு உமையாள் என்னும் மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கி|றது.

மாரடைப்பால் சேதுராமன் மரணம் அடைந்தது திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.அவரது மரண செய்தியால் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். சீக்கிரமே போய்விட்டார். நல்ல மனிதர் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு, ‘36 வயதில் மாரடைப்பு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடவுளே இது நியாயமா? ‘என பதிவிட்டு இருக்கிறார்.

இதேபோல் நடிகை குஷ்பு, நீ எவ்வளவு இதயங்களை நொறுக்கி விட்டு சென்றிருக்கிறாய் சேது. ஏன் இவ்வளவு வேகமாக சென்றாய்? பிறரைக் காட்டிலும் நல்ல உள்ளங்கள் ஏன் இவ்வளவு வேகமாக செல்கின்றன. உன் அமைதியான குணத்தையும், அழகான சிரிப்பையும் நான் நிச்சயம் மிஸ் செய்வேன்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வரும்நிலையில் இந்தியாவிலும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போதுகூட கரோனா வைரஸின் தொற்று குறித்து நடிகரும், மருத்துவருமான சேதுராமன் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு இருந்தார். ஆனால் அதிலிருந்து இரண்டே நாளில் அவர் திடீரென இறந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவர் சேதுராமன் நடிகர் சந்தானத்தில் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுடன் பகிர :