ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்.. மக்களை மகிழ்விக்க போலீஸார் செய்த வேலையைப் பாருங்க..! Description: ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்.. மக்களை மகிழ்விக்க போலீஸார் செய்த வேலையைப் பாருங்க..!

ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்.. மக்களை மகிழ்விக்க போலீஸார் செய்த வேலையைப் பாருங்க..!


ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்.. மக்களை மகிழ்விக்க போலீஸார் செய்த வேலையைப் பாருங்க..!

கொரானா அச்சம் நம் இந்தியாவையும் உலுக்கி எடுத்து வருகிறது. சீன நாடில் தொடங்கிய கொரானா உலக நாடுகள் அனைத்துக்கும் பெரும் சவாலாக மாறிவருகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவ் வரும் ஏப்ரல் 14ம் தேதிவரை போடப்பட்டுள்ளது. இதனால் யாரும் வீட்டை விட்டே வெளியில் வரவில்லை.

இந்தியாவில் இதுவரை 550 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. தமிழகத்தில் கொரானா நோய்க்கு மதுரையைச் சேர்ந்த 54 வயதானவர் பலியாகி இருக்கிறார். இந்தியாவைப் போலவே ஸ்பெயின் நாட்டின் மல்லோரியா தீவிலும் கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது.

இங்கு ஊரடங்கை கண்காணிக்க வரும் போலீஸார், பாட்டுப்பாடி உற்சாகமாக நடனமாடியும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களை சந்தோசப்படுத்தி வருகின்றனர். இங்குள்ள அல்கோடியா நகரில் ரோந்துவந்த போலீஸார் கையில் இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு சைரன் பொருத்திய காரில் இருந்து இறங்கி திடீரென இசை வெள்ளத்தில் மக்களை மூழ்கச் செய்தனர். சாலையில் இசை கருவிகளை இயக்கும் சப்தம்கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து உற்சாகமாக கைதட்டி மக்கள் மகிழ்ந்தனர்.

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அவர்களை குஷிப்படுத்த போலீஸார் செய்த அந்த முயற்சி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :