இதையெல்லாம் தொட்டால் உடனே கைகளை கழுவிடுங்க.. இதன் மூலமெல்லாம் கொரனா பரவும் வாய்ப்பு அதிகம்..! Description: இதையெல்லாம் தொட்டால் உடனே கைகளை கழுவிடுங்க.. இதன் மூலமெல்லாம் கொரனா பரவும் வாய்ப்பு அதிகம்..!

இதையெல்லாம் தொட்டால் உடனே கைகளை கழுவிடுங்க.. இதன் மூலமெல்லாம் கொரனா பரவும் வாய்ப்பு அதிகம்..!


இதையெல்லாம் தொட்டால் உடனே கைகளை கழுவிடுங்க.. இதன் மூலமெல்லாம் கொரனா பரவும் வாய்ப்பு அதிகம்..!

உலகையே கொரானா உலுக்கிக் கொண்டிருக்கிறது.பல நாடுகளிலும் இதனால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். பலரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வாழ்கின்றனர். நம் இந்தியாவிலும் வரும் ஏப்ரல் 14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அரசும் மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கே தடைவிதித்துள்ளது. சினிமா தியேட்டர்கள் முடப்பட்டு இருக்கிறது. பல நிறுவனங்களும் வொர்க் அட் ஹோம் சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மக்கள் அடிக்கடி கை கழுவ வேண்டும்.முகத்தில் மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும். யாருக்கும் கைகொடுக்கக் கூடாது என அரசு பல அறிவுறுத்தல்கள் செய்து இருக்கிறது. கொரனா வைரஸ் தாக்கத்தினால் நாடே அஞ்சியிருக்கிறது. யாரும் ஒருவருக்கொருவ்ர் கைகொடுக்கவோ, அருகருகே இருக்கவோ முடியாது என்னும் சூழல் எழுந்திருக்கிறது. மக்கள் வீடுகளில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில் எந்த பொருளையெல்லாம் தொட்டால் கண்டிப்பாக கைகழுவ வேண்டும் என்பது குறித்த விழிப்புனர்வு பொதுமக்களுக்கு அவசியம். அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பொது இடங்களில் உள்ள கதவு அல்லது கைப்பிடி, மாடிப்படிக்கட்டு, டேபிள்டாப், செல்லப்பிராணிகள், மற்றவர்களின் ஸ்மார்ட் போன், அடுத்தவரின் பேனா, அடிபம்பு, சமையல் அறை ஸ்பாஞ்ச் ஆகியவற்றை தொட்டால் உடனே கைகளை கழுவ வேண்டும்.

இதேபோல் நம் கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு அழிக்கடி கழுவ வேண்டும். தும்மல் அல்லது இருமல் உள்ளவர்களிடம் இருந்து ஒருமீட்டரில் இருந்து மூன்று மீட்டர் வரை இடைவெளி விடவேண்டும். கையால் கண், மூக்கு, வாயைத் தொடக் கூடாது. நீங்கள் எங்கேனும் கை வைத்து அதில் கிருமி தொற்றி இருந்தால், அதன் மூலம் உங்கள் உடலுக்குள் செல்ல இதில் வாய்ப்பு அதிகம். இதேபோல் காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்னை இருந்தால் உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுவிட வேண்டும்.


நண்பர்களுடன் பகிர :