கொரானாவால் வேலை இழந்து சொந்த ஊர் போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நேற்று தொழிலாளி.. இன்று திடீர் கோடீஸ்வரன்..! Description: கொரானாவால் வேலை இழந்து சொந்த ஊர் போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நேற்று தொழிலாளி.. இன்று திடீர் கோடீஸ்வரன்..!

கொரானாவால் வேலை இழந்து சொந்த ஊர் போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நேற்று தொழிலாளி.. இன்று திடீர் கோடீஸ்வரன்..!


கொரானாவால் வேலை இழந்து சொந்த ஊர் போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நேற்று தொழிலாளி.. இன்று திடீர் கோடீஸ்வரன்..!

கொரானாவின் கோரத்தாண்டவம் உலகின் அனைத்து நாடுகளையும் அலறவைத்துள்ளது. நம் அண்டை மாநிலமான கேரளத்தில் வரும் 31ம் தேதிவரை இதனால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சபரிமலை மாதாந்திர நடைதிறப்புக்கும் யாரும் வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் கொரானா தாக்குதலுக்கு 80 ஆயிரம் பேர் உள்ளாகி இருந்தனர். அதில் மூவாயிரம் பேர் பலியாகினர். இந்தியாவில் 29 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.

கொரானா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்திலும் 31ம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரிகளும் மூடப்பட்டு உள்ளது. முக்கிய கோயில்களும் நடை அடைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு முறையை பின்பற்றக் கேட்டு இருக்கிறார். இப்படியான சூழலில் பாதிப்பு அதிதீவிரமாக இருந்த சீனாவில் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து, அந்நாட்டில் இயல்புநிலை திரும்பி வருகிறது . ஆனால் இத்தாலியை இப்போது கொரானா உலுக்கி வருகிறது.

கொரானாவால் பலரும் வேலை இழந்து சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தச்சர் லெஜருள் என்பவர் கேரளத்தில் தங்கி இருந்து தச்சுப்பணி செய்துவந்தார். கேரளத்தை கொரானா உலுக்கிக் கொண்டிருக்க, தனக்கு அந்த நோய் தொற்றிவிடக்கூடாது என ரயில் ஏறி தனது சொந்த ஊரான மேற்கு வங்கத்துக்கு வந்தார். அப்போது வழியில் அவர் வாங்கிய கேரள லாட்டரிக்கு பரிசுத்தொகை விழுந்தது.

ஏற்கனவே கரோனா தொற்றின் தீவிரத்தால் வாழ்வாதாரமும், வேலையும் இழந்து சொந்த ஊருக்கு வந்துவிட்ட லெஜருளுக்கு இந்த திடீர் அதிஷ்டம் கடும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. ‘படிக்க வசதியில்மாமல்தான் நான் தச்சர் வேலைக்கு வந்தேன். இந்த பணத்தில் என் மகனை மேல்படிப்பு படிக்க வைப்பேன்.’எனக் கூறியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :