கொரோனாவை விரட்ட மருத்துவகுணம் நிறைந்த சூப்பை இலவசமாக வழங்கும் தமிழர்..! Description: கொரோனாவை விரட்ட மருத்துவகுணம் நிறைந்த சூப்பை இலவசமாக வழங்கும் தமிழர்..!

கொரோனாவை விரட்ட மருத்துவகுணம் நிறைந்த சூப்பை இலவசமாக வழங்கும் தமிழர்..!


கொரோனாவை விரட்ட மருத்துவகுணம் நிறைந்த சூப்பை இலவசமாக வழங்கும் தமிழர்..!

கொரானாவின் கோரத்தாண்டவம் உலகின் அனைத்து நாடுகளையும் அலறவைத்துள்ளது. நம் அண்டை மாநிலமான கேரளத்தில் வரும் 31ம் தேதிவரை இதனால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சபரிமலை மாதாந்திர நடைதிறப்புக்கும் யாரும் வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் கொரானா தாக்குதலுக்கு 80 ஆயிரம் பேர் உள்ளாகி இருந்தனர். அதில் மூவாயிரம் பேர் பலியாகினர். இந்தியாவில் 29 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.

கொரானா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்திலும் 31ம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரிகளும் மூடப்பட்டு உள்ளது. முக்கிய கோயில்களும் நடை அடைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு முறையை பின்பற்றக் கேட்டு இருக்கிறார். இப்படியான சூழலில் பாதிப்பு அதிதீவிரமாக இருந்த சீனாவில் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து, அந்நாட்டில் இயல்புநிலை திரும்பி வருகிறது . ஆனால் இத்தாலியை இப்போது கொரானா உலுக்கி வருகிறது.

கொரானா அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போரைதான் தாக்குகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை கண்டியன் தெருவை சேர்ந்த 28 வயது வாலிபர் சிவா, ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். பட்டுக்கோட்டை நீதிமன்றம் அருகே ஜீஸ் கடை வைத்திருக்கும் இவர், ‘ நெல்லிக்காய், கேரட், சின்னவெங்காயம், கருஞ்சீரகம், பூண்டு, இஞ்சி, வேப்பிலை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து சூப் செய்து இலவசமாகக் கொடுத்து வருகிறார். இதன் மூலம் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்குமாம் இதை தன்னை சுற்றியிருப்போர் யாரும் பாதிக்கப்படக் கூடாது என வழங்கி வருகிறாராம் சிவா.

சிவாவின் இந்த மனிதநேய செயலுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


நண்பர்களுடன் பகிர :