கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எரியுதும்மா.. புலம்பித் தீர்த்த இயக்குனர் சேரன்..! Description: கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எரியுதும்மா.. புலம்பித் தீர்த்த இயக்குனர் சேரன்..!

கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எரியுதும்மா.. புலம்பித் தீர்த்த இயக்குனர் சேரன்..!


 கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எரியுதும்மா.. புலம்பித் தீர்த்த இயக்குனர் சேரன்..!

தமிழ்த்திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் சேரன். இவரது ஆட்டோகிராப் திரைப்படம் பலரது பால்யகால நினைவுகளை மீட்டெடுத்தது. தொடர்ந்து சொல்ல மறந்தகதை என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் சேரன்.

ஆனால் அதில் சிலபடங்கள் மட்டுமே நன்றாக போனது. இதனால் மார்க்கெட் இழந்த சேரன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன்மூலம் மீண்டும் மீடியா வெளிச்சத்துக்கு வந்தார் சேரன். தொடர்ந்து ராஜாவுக்கு செக் என்னும் படத்தில் ஹீரோவாக மீண்டும் பீக்கிற்கு வந்தார் சேரன். இதில் சேரனுக்கு ஜோடியாக சராயூ மோகன் நடித்தார். கூடவே இந்த படத்தில் கணா காணும் காலங்கள் இர்பான், சிருஷ்டி டாங்கே, வர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு பிகைண்ட்வுட்ஸ் சைட் விமர்சனம் எழுதவில்லை என அதன் நிர்வாகிக்கு வாட்ஸ் அப்பில் செம கோபமாக ஒரு தகவல் அனுப்பி இருந்தார் சேரன். சமீபத்தில் அந்த யூடியூப் சேனல் சேரனுக்கு கே.எஸ்.ரவிக்குமார் கையால் ஐகான் ஆப் தி இயர் என்னும் விருதைக் கொடுத்தது. இந்த விருதையும் திருப்பி அனுப்பியிருந்தார் சேரன்.இப்படி ராஜாவுக்கு செக்கால் ரொம்பவே காண்டாகி இருந்த சேரன் இப்போது மீண்டும் கடுப்பாகி இருக்கிறார்.

அமேஸான் பிரைமில் இருக்கும் அந்த படத்தை பெண் ரசிகை ஒருவர் த்ரில்லிங் எண்டர்டெயினர் பிலிம் என பதிவிட்டு இருந்தார். அதற்கு நடிகர் சேரன் மிக ஆவேசமாக பதில் சொல்லியிருக்கிறார். அந்தபதிலில், ‘ அநியாயமா கொன்னுட்டாங்கம்ம படத்தை..எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர்மகன்ல ஒரு டயலாக் இருக்கும். அப்படி கஷ்டப்பட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.. அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க..வயிறு எரியுதும்மா..சும்மா விடாது எங்களோட உழைப்பு.’என செம கோபமாக பதில் சொல்லியிருக்கிறார் சேரன்.


நண்பர்களுடன் பகிர :