7 ஆண்டு காதலை திடீர் பிரேக்கப் செய்த காதலன்.. மணநாள் நெருங்கிய நிலையில் மாற்றுத் திறனாளி காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி..! Description: 7 ஆண்டு காதலை திடீர் பிரேக்கப் செய்த காதலன்.. மணநாள் நெருங்கிய நிலையில் மாற்றுத் திறனாளி காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

7 ஆண்டு காதலை திடீர் பிரேக்கப் செய்த காதலன்.. மணநாள் நெருங்கிய நிலையில் மாற்றுத் திறனாளி காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!


7 ஆண்டு காதலை திடீர் பிரேக்கப் செய்த காதலன்.. மணநாள் நெருங்கிய நிலையில்  மாற்றுத் திறனாளி காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

தான் 7 ஆண்டுகள் காதலித்துவந்த பெண்ணை திருமண நா நெருங்கிய நிலையில் காதலன் புறக்கணித்தார். இதுகுறித்து விசாரித்தபோது காதலிக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற 31 வயது வாலிபர் அங்குள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றுக்கு அன்னதானம் செய்ய அடிக்கடி வந்திருக்கிறார். அப்போது அங்கு இருந்த தேவி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணிடம் 70 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று இருக்கிறார். துவக்கத்தில் இவர்களுக்குள் இருந்த கொடுக்கல், வாங்கல் விவகாரம் ஒருகட்டத்தில் காதலாக மாறியது.

தேவியும், கண்ணனும் ஒருவரை ஒருவர் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தங்களுடைய காதலை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல திருமணம் செய்யலாம் என காதலர்கள் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளை செய்யச்சொன்ன கண்ணன் திடீரென கடந்த 2ம் தேதி திருமணத்தை நிறுத்தச்சொல்லி தேவிக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்

திடீரென கண்ணன் திருமணத்தை நிறுத்தச் சொன்னது குறித்து சந்தேகம் அடைந்த தேவி அதுகுறித்து விசாரணையில் இறங்கினார். அப்போதுதான் கண்ணனுக்கு ஏற்கனவே கயல்விழி என்ற பெண்ணோடு திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்னரே இந்த திருமணம் நடந்திருக்கும் நிலையில் அதை மறைத்துவிட்டுத்தான் தேவியை காதலித்திருக்கிறார் கண்ணன். தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில் கண்ணன் பல பெண்களை இப்படி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. .


நண்பர்களுடன் பகிர :