நடிகை தேவயானி பற்றி பலரும் அறியாத தகவல்... அவரின் தந்தை யார் தெரியுமா? Description: நடிகை தேவயானி பற்றி பலரும் அறியாத தகவல்... அவரின் தந்தை யார் தெரியுமா?

நடிகை தேவயானி பற்றி பலரும் அறியாத தகவல்... அவரின் தந்தை யார் தெரியுமா?


 நடிகை தேவயானி பற்றி பலரும் அறியாத தகவல்... அவரின் தந்தை யார் தெரியுமா?

தமிழ்த்திரையுலகில் அழகான சிரிப்புக்கும், ஆபாசமே இல்லாத நடிப்புக்கும் சொந்தக்காரி தேவயானி. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்தவர் தேவயானி. ஆர்ப்பாட்டமே இல்லாத மிக எளிமையான நபராக இப்போது உலா வந்து கொண்டிருக்கிறார்.

திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே இயக்குனர் ராஜகுமாரன் மீது காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தவர். தற்போது கணவர், மகள்கள் இனியா, பிரியங்காவோடு மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து வருகிறார். அந்தியூர் தாலுகா, சின்னமங்கலம் கிராமத்தில் தோட்டத்தோடு கூடிய வீடு ஒன்றும் உள்ளது. பகுதிவாசிகளால் அந்த ஏரியா தேவயானி தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

அம்மாவின் கைப்பக்குவத்தில் சாப்பிடுவது தேவயானிக்கு கொள்ளைப் பிரியம். சைவம் என்றால் ரசமும், அசைவம் என்றால் மீன் குழம்பும், பிரியாணியும் பேவரைட் என்கிறார். வெளிநாட்டு பயணம் என்றால் சுவிட்சர்லாந்து தேவையானியின் இஷ்ட பிரதேசம். தன் பாட்டி மீது தேவயானிக்கு கொள்ளைப் பிரியமாம்.

பாட்டிதான் தனது ரோல்மாடல் என அடிக்கடி சொல்கிறார் தேவயானி. அட்ரா அட்ரா நாக்குமுக்கா புகழ் நகுல் தேவயானியின் தம்பி என்பது அனைவருக்கும் தெரியும். தேவயானியின் தந்தை உள்பட மொத்த குடும்பத்தின் புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. கோலங்கள் போல் மீண்டும் ஒரு சீரியலில் தேவயானி தலைகாட்ட மாட்டாரா என அவரது ரசிகர்கள் ஏங்கிப் போகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :