குடும்பத்தினர் எதிர்ப்பைமீறி விவசாயியை கைப்பிடித்த பட்டதாரிப் பெண்.. சமூக அக்கறைக்கு குவியும் பாராட்டுகள்.. அவர் சொன்ன காரணம் இருக்கே...! Description: குடும்பத்தினர் எதிர்ப்பைமீறி விவசாயியை கைப்பிடித்த பட்டதாரிப் பெண்.. சமூக அக்கறைக்கு குவியும் பாராட்டுகள்.. அவர் சொன்ன காரணம் இருக்கே...!

குடும்பத்தினர் எதிர்ப்பைமீறி விவசாயியை கைப்பிடித்த பட்டதாரிப் பெண்.. சமூக அக்கறைக்கு குவியும் பாராட்டுகள்.. அவர் சொன்ன காரணம் இருக்கே...!


குடும்பத்தினர் எதிர்ப்பைமீறி விவசாயியை கைப்பிடித்த பட்டதாரிப் பெண்.. சமூக அக்கறைக்கு குவியும் பாராட்டுகள்.. அவர் சொன்ன காரணம் இருக்கே...!

டாக்டர், இஞ்சினியர் மாப்பிள்ளை மோகத்திலேயே இருக்கும் இன்றைய கால ஓட்டத்தில் விவசாயம் செய்வோரை திருமணம் செய்துகொள்ள பெண்கள் தயாராக இல்லை. இப்படியான காலச்சூழலுக்கு மத்தியில் விவசாயியை வீட்டு எதிர்ப்பைமீறி கல்யாணம் செய்து இருக்கிறார் பெண் ஒருவர். அவருக்கு சோசியல் மீடியாக்களில் வாழ்த்தும் குவிந்து வருகிறது.

பல்லடம் நெகமம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா மாணிக்கவேல். பி.பி.எம் பட்டதாரியான இவருக்கு திருமணம் செய்துவைக்கும் எண்ணத்தில் வீட்டில் வரன் தேடி வந்தனர். இவரது தாய்மாமன் மகன் சந்திரசேகரன் விவசாயம் பார்த்து வருகிறார். அவருக்கு வருமானம் அதிகமில்லை என்பதாலும்,இவர் அதிகம் படிக்காத காரணத்தினாலும் இவருக்கு வரும் வரன்கள் தடங்கலாகிக் கொண்டே இருந்ததால் மனமுடைந்த இவர் திருமணமே வேண்டாம் என்று முடிவுசெய்தார்.இதனாலேயே அவர் உறவினர் வீட்டு விஷேசங்களுக்கும் கூட செல்வதில்லை.தான் உண்டு, தன் விவசாய வேலை உண்டு என்பதிலேயே குறியாய் இருந்தார் சந்திரசேகரன்.

இந்நிலையில் இதையெல்லாம் கவனித்து வந்த சரண்யா, எனக்கு வெளியில் வரன் பார்ப்பதை நிறுத்துங்கள். நான் மாமா மகனையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். "அவன் ஒரு விவசாயி. அவனுக்கு அதில் வருமானம் அதிகமில்லை.படிக்காதவனை கட்டி நீ சீரழியப் போற"" என சாதி, மதம் எல்லாம் ஒன்றாக இருந்தாலும் விவசாஇ என்பதால் சரண்யாவின் குடும்பம் தடைபோட்டது. ஆனால் அதையெல்லாம் மீறி மாமாவின் கரம்பிடித்தார் சரண்யா.

இதற்கு சரண்யா சொன்ன காரணம் இப்போது சோசியல் மீடியாக்களில் செம வைரலாக போய்க் கொண்டு இருக்கிறது.

"விவசாயிக்கு பெண் கொடுக்கவே பலரும் தயங்குகின்றனர்.ஏன்னு தெரியல. நான் கல்லூரிக்குப் போய் படித்த காரணத்தாலேயே என்னைப் பெண் கேக்க மாமா தயங்கினார். ஊருக்கு சோறு போடும் தொழில் செய்பவர்களுக்கு படித்த பெண்கள் தரும் மரியாதையைப் பாருங்கள். இதை எல்லாம் மனதில் வைத்தே என் மாமாவை கல்யாணம் செஞ்சேன். இனி நானும் அவருடன் விவசாயத்திற்கு உதவியாக இருப்பேன். விவசாயிய கலியாணம் பண்ணா வாழ்க்கை நன்றாக இருக்கும் என காட்ட போறேன்..’என சொல்லி நெகிழ வைத்திருக்கிறார்.

நீங்களும் இந்த தம்பதிக்கு ஒரு திருமணவாழ்த்தை தட்டிவிடுங்க ப்ரண்ட்ஸ்..


நண்பர்களுடன் பகிர :