தலையில் அடித்து கதறி அழுத டைரக்டர் ஷங்கர்.. நேரில் பார்த்தவர் பகிர்ந்த திக்..திக்..நிமிடங்கள்..! Description: தலையில் அடித்து கதறி அழுத டைரக்டர் ஷங்கர்.. நேரில் பார்த்தவர் பகிர்ந்த திக்..திக்..நிமிடங்கள்..!

தலையில் அடித்து கதறி அழுத டைரக்டர் ஷங்கர்.. நேரில் பார்த்தவர் பகிர்ந்த திக்..திக்..நிமிடங்கள்..!


தலையில் அடித்து கதறி அழுத டைரக்டர் ஷங்கர்.. நேரில் பார்த்தவர் பகிர்ந்த திக்..திக்..நிமிடங்கள்..!

இயக்குனர் சங்கர் என்றாலே பிரமாண்டம் தான். அவர் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு, உலகத் தரத்தில் விருந்து படைக்கும். அண்மையில் கூட ரஜினிகாந்தை வைத்து 2.0 என்னும் படம் எடுத்து இந்தியாவையே தமிழ்த்திரையுலகம் நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தார்.

பிரமாண்டமான காட்சி வடிவமைப்புக்காக ரொம்பவே ரிஸ்க் எடுப்பார் சங்கர். அந்தவகையில் இப்போது கமலஹாசனை வைத்து எடுத்து வரும் இந்தியன் 2 படத்துக்காக வேலை செய்தபோது கிரேன் அறுந்து விழுந்து மூன்று பேர் பலியாகினர். பலியானவர்களுக்கும், காயம் அடைந்தோருக்கும் சேர்ந்து ஒருகோடி ரூபாய் நலத்திட்ட உதவியை கமல் அறிவித்து இருக்கிறார்.

இந்த கோரவிபத்தை நேரில் பார்த்த தொழில்நுட்ப கலைஞர் கூறுகையில், ‘கிரேனில் இருந்து தொடர்ந்து சத்தம் வந்துகொண்டே இருந்தது. லைட்டிங் செட் செய்வதால் அப்படி இருக்கலாம்ன்னு நினைச்சே. திடீர்ன்னு பெரிய சத்தத்தோடு கிரேன் இடிஞ்சு விழுந்ததும் தலையில் அடிச்சுகிட்டே சங்கர் ஓடி வந்தார்.

அந்த நேரம் உணவு இடைவேளை என்பதால் மிகப்பெரிய விபரீதம் தடுக்கப்பட்டுருச்சு. படப்பிடிப்பு நேரமா இருந்தா...நினைச்சுப் பார்க்கவே சங்கடமா இருக்கு.’ என வேதனையோடு தெரிவித்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :