லாஸ்லியாவுக்கு முதல்படத்திலேயே அடித்த அதிஷ்டம்... முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் யார் தெரியுமா..? Description: லாஸ்லியாவுக்கு முதல்படத்திலேயே அடித்த அதிஷ்டம்... முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் யார் தெரியுமா..?

லாஸ்லியாவுக்கு முதல்படத்திலேயே அடித்த அதிஷ்டம்... முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் யார் தெரியுமா..?


லாஸ்லியாவுக்கு முதல்படத்திலேயே அடித்த அதிஷ்டம்... முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் யார் தெரியுமா..?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டு உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் லாஸ்லியா. இவரது வெள்ளந்தியான குணம் ஆரம்பத்தில் நன்கு பேசப்பட்டது. நிகழ்ச்சியின் பின்பகுதியில் காதல் விவகாரத்தில் சிக்கி கொஞ்சம் தன் பெயரை டேமேஜ்ம் செய்து கொண்டார்.

ஆனாலும் லாஸ்லியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் படை இருக்கிறது. லாஸ்லியா ஆர்மியும் அமைத்தனர். லாஸ்லியா அண்மையில் நடிகர் ஆரியுடனும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் அந்த புகைப்படத்தின் மேல் போட்டோ கேப்சனாக நடிப்பில் களமிறங்கிவிட்டார் என்றும் முதல் படத்தின் பூஜை ஆரம்பமாகியுள்ளது எனவும் கூறப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து லாஸ்லியா நாயகியா நடிக்கிறார் என அவரது ரசிகர்கள் போஸ்டின் கீழ் ஹார்டீன்களை பறக்க விட்டனர்.

இப்போது அந்த படம் உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் நடிப்பதை படக்குழு உறுதி செய்து இருக்கிறது. இதனால் லாஸ்லியா ரசிகர்கள் செம ஹேப்பி. ஆக்சன் பிரியர்கள் மத்தியில் அர்ஜூனுக்கு மிகப்பெரிய கிரேஸ் இருக்கிறது.

அர்ஜூன் படத்தில் இணைவதால் லாஸ்லியாவுக்கு மாஸ் ஓப்பனிங் கிடைத்திருப்பதாக இப்போதே மகிழ்ச்சியில் இருக்கிறார்கல் லாஸ்லியா ஆர்மியினர். ஆனாலும் படத்தில் அர்ஜூன் நடிக்கும் கேரக்டரை இப்போதைக்கு ரகசியமாக வைத்திருக்கிறது படக்குழு.


நண்பர்களுடன் பகிர :