கலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா...? டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..? Description: கலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா...? டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..?

கலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா...? டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..?


கலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா...? டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..?

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் படைய வைத்திருக்கும் காமெடியன்களில் கஞ்சா கருப்பும் ஒருவர். பாலாவின் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘பிதாமகன்; திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் தான் கஞ்சா கருப்பு.

ஜீவா நடித்த ‘ராம்’ திரைப்படத்தில் கஞ்சா கருப்பு நடித்த ‘வாழவந்தான்’ கதாபாத்திரம் அவரை பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது. ஆனால் இடையில் சிலகாலம் போதிய திரைப்பட வாய்ப்பு இல்லாமல் மிகவும் தவித்தார் கஞ்சா கருப்பு. விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி அவருக்கு ரீ எண்ட்ரி கொடுத்தது. ஆனால் அங்கும் பரமக்குடியை சேர்ந்த நடிகர் பரணியோடு அடிக்கடி மல்லுக்கு நின்று தன் பெயரை வெகுவாக டேமேஜ் செய்து கொண்டார் கஞ்சா கருப்பு.

அண்மையில் தன் கடந்தகாலம் குறித்து ரொம்பவே மனம் திறந்து பேசியிருக்கிறார் கஞ்சா கருப்பு. அதில் அவர், ‘நான் அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் தான் படிச்சேன். ஆனா ஊரில் மத்தபிள்ளைங்க படிக்கணும்ன்னு ஸ்கூல் கட்டிக்கொடுத்தேன். அப்பா உடம்பு சரியில்லாம இருந்தாங்க. அதனாலேயே கல்யாணம் செஞ்சா டாக்டர் பொண்ணைதான் செய்யணும்ன்னு இருந்தேன். அப்படியே செஞ்சேன்.

லைப் நல்லாத்தான் போச்சு. ஆனா திடீர்ன்னு ஒருத்தரால லைப்ல சூறாவளி வீசுச்சு. அவரால் படம் தயாரிக்க ஆரம்பிச்சு, அது நஷ்டத்தில் முடிஞ்சு அதில் இருந்து மீளவே சிலகாலம் ஆகிடுச்சு. அதனாலேயே சிலகாலம் நடிக்கவும் முடியல. அந்த சூழலில் எங்களை எப்படி இருக்கோம்னு விசாரிக்க கூட யாரும் வரலை. இப்போ மறுபடி நடிக்க ஆரம்பிச்சுட்டேன். இனி நிம்மதியாக இருப்பேன்.’ என்கிறார்.


நண்பர்களுடன் பகிர :