என்னால இந்த நடிகரின் வாழ்க்கையே போச்சு... வேதனையில் மனம்திறந்து பேசிய நடிகை வடிவுக்கரசி...! Description: என்னால இந்த நடிகரின் வாழ்க்கையே போச்சு... வேதனையில் மனம்திறந்து பேசிய நடிகை வடிவுக்கரசி...!

என்னால இந்த நடிகரின் வாழ்க்கையே போச்சு... வேதனையில் மனம்திறந்து பேசிய நடிகை வடிவுக்கரசி...!


என்னால இந்த நடிகரின்  வாழ்க்கையே போச்சு... வேதனையில் மனம்திறந்து பேசிய நடிகை வடிவுக்கரசி...!

தமிழ்த்திரையுலகில் அம்மா தொடங்கி, வில்லி பாத்திரம் வரை அசத்தியவர் நடிகை வடிவுக்கரசி. கன்னிப்பருவத்திலே என்னும் திரைப்படம் மூலம் முதலில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

300க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் வடிவுக்கரசி பத்துக்கும் அதிகமான சீரியலிலும் நடித்திருக்கிறார். இப்போதுகூட அவர் நடிப்பில் ரோஜா, நாச்சியார்புரம் என இருசீரியல்கள் போய்க்கொண்டு இருக்கிறது. இவரது நெடுங்கிய உறவினர்தான் நடிகர் பிரேம். இவர் சீரியல்களில் அதிகம் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் விக்ரம் வேதா திரைப்படம் பிரேமுக்கு நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. அதில் இவர் ஏற்ற சைமன் பாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது இண்டஸ்ட்ரியில் முக்கியமான இடத்துக்கு வந்திருக்கும் பிரேம், சர்கார், சிவப்பு மஜ்சள் பச்சை, பெட்ரமாக்ஸ் படங்களுக்கு பின்பு இப்போது மாஸ்டரிலும் நடித்து வருகிறார். அண்ணி, அண்ணாமலை சீரியல்கள்தான் பிரேமை ஏராளமான மக்களிடம் கொண்டு போனது.

இந்நிலையில் நடிகர் பிரேம் குறித்து சில விசயங்களை பகிர்ந்து இருக்கிறார் நடிகை வடிவுக்கரசி. அதில் அவர், ‘ப்ரேம் என்னோட அத்தனை பையன். அவன் தாத்தா தான் ராமநாதபுரம் ராஜா. கிழக்கு சீமையிலே படத்தில் என்னை நடிக்க கூப்பிட்டுட்டு பாரதிராஜாசார் வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு. ச்சூட்டிங் ஸ்பாட்ல இருந்து கோபிச்சுகிட்டு ரயில்வே ஸ்டேசனுக்கு வந்தேன்..சென்னைக்கு போறதுக்கு!

அப்போ என் பின்னாடியே பிரேமும் வந்துட்டாரு. கிழக்கு சீமையிலே படத்தில் ராதிகாவின் மகனா நடிக்க இருந்ததே பிரேம்தான். அத்தாச்சி வருத்தப்பட்டு போறாங்களேன்னு அவனும் என் பின்னாடி வந்துட்டான். ஆனா அதைப்பார்த்த படக்குழுவோ, அவன் அப்படியே போகட்டும்ன்னு விட்டுட்டாங்க. பிரேம் பாரதிராஜாவோட அறிமுகமா இருந்திருப்பாரு. அது என்னால போச்சு.’என வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார் வடிவுக்கரசி.


நண்பர்களுடன் பகிர :