ப்ரண்ட்ஸ் படத்தில் விஜயாக நடித்த இந்த சிறுவன்... இப்போது எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழ்த்திரையுலகில் ஜொலிக்கும் பலரும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் நுழைந்தவர்கள்தான். அப்படி நுழைந்து உச்சம் தொட்டவர்கள் பலர் உண்டு. நடிகை மீனா தொடங்கி இன்று இண்டஸ்ட்ரியில் இருக்கும் பலர் குழந்தைப்பருவத்தில் இருந்தே நடிப்பவர்களே.அதேநேரம் சிலர் குழந்தை பருவத்தில் கலக்குவார்கள். வளர்ந்த பின் போதிய வாய்ப்பு இருக்காது.

அப்படி ஒரு குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவரின் கதைதான் இது. சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா கூட்டணியில் கடந்த 2001ல் சக்கைபோடு போட்ட படம் ப்ரண்ட்ஸ். இதில் வடிவேலு நடித்த நேசமணி பாத்திரம் அண்மையில் கூட ட்ரெண்டானது. இந்த படத்தில் சின்னவயது விஜயாக ஒரு சிறுவன் நடித்திருந்தான். அவர் இப்போது 34 வயது இளைஞர்!

குட்டி விஜயின் உண்மையான பெயர் பரத் ஜெயந்த். 1988ல் சென்னையில் பிறந்த இவர், 14 வயதில் ப்ரண்ட்ழ்ட் படத்தில் நடித்தார் இதேபோல் ப்ரியமான தோழி உள்ளிட்ட சிலபடங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இவர் விஸ்வல் கம்யூனிகேசன், எம்.ஏ முடித்து விட்டு தொடர்ந்து மாடலிங் துறையில் இயங்கிவந்தார். வானத்தைப் போல, ப்ரியமான தோழி, இளமை நாட்கள் என சில படங்களில் சின்ன ரோலில் நடித்தார்.

அதர்வா படம் ஒன்றில் துணை இயக்குனராகவும் இருந்த பரத்தின் இப்போதைய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதைப் பார்க்கும் தளபதி ரசிகர்கள் அடேங்கப்பா..சின்ன வயது விஜயாக நடித்தவரா இது? என சேர் செய்து வருகின்றனர்.