பரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ Description: பரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ

பரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ


பரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ

தமிழகத்தில் எஸ். பி. பால சுப்பிரமணியத்துக்கு அறிமுகமே தேவை இல்லை. தமிழகத்தில் அவர் குரல் ஒலிக்காத இல்லங்களே இல்லை என்று சொல்லலாம்.

எஸ். பி. பியின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலத்தின் நெல்லூர். இவர் எம். ஜி. ஆர் படத்தில் இடம் பெற்ற ஆயிரம் நிலவே பாடலை தான் முதன் முதலில் பாடினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார்.

எஸ். பி.பியின் அப்பா வாழ்ந்த பூர்வீக வீடு நெல்லூரில் இருக்கிறது. இந்த வீட்டை தான் தற்போது சென்னையில் வசிக்கும் எஸ். பி. பி காஞ்சிமடத்துக்கு தானமாக வழங்கி உள்ளார்.

எஸ். பி. பி இந்த வீட்டை முறைப்படி காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதியிடம் ஒப்படைத்தார். இந்த வீட்டை காஞ்சி மடம் வேத பாட சாலையாக மாற்றுகிறது.

இந்த வீட்டை ஒப்படைக்கும் போது எஸ். பி. பி பாடிய ஆன்மீக பாடலும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :