கழுத்தில் டயரோடு தவித்து வரும் முதலை.. உயிரோடு டயரை கழட்டினால் லட்சங்களில் பரிசு..! Description: கழுத்தில் டயரோடு தவித்து வரும் முதலை.. உயிரோடு டயரை கழட்டினால் லட்சங்களில் பரிசு..!

கழுத்தில் டயரோடு தவித்து வரும் முதலை.. உயிரோடு டயரை கழட்டினால் லட்சங்களில் பரிசு..!


கழுத்தில் டயரோடு தவித்து வரும் முதலை.. உயிரோடு டயரை கழட்டினால் லட்சங்களில் பரிசு..!

பக்கெட்டில் இருக்கும் தண்ணீரைக் குடிக்க தலையை விட்டுவிட்டு தலையில் பக்கெட்டோடோ, அல்லது பிளாஸ்டிக் கேரிபேக்கோடோ வலம்வரும் நாய்களை நம்மூரில் அடிக்கடி பார்த்திருப்போம். அதேபோல் ஒரு முதலை கழுத்தில் டயரோடு வலம் வருகிறது. அதன் கழுத்தில் இருக்கும் டயரை கழட்டினால் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்தோனேசியாவின் மத்திய சுலவெசி பகுதியில் 13 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று உள்ளது. அதன் கழுத்தில் கடலில் எப்போதோ யாரோ தூக்கி வீசிய டயர் ஒன்று மாட்டிக்கொண்டது. ஆனால் அந்த டயரில் இருந்து முதலையால் விடுபட முடியவில்லை. கடந்த 2016ல் பாலு ஆற்றில் பார்த்த போதும் முதலையில் கழுத்தில் டயர் இருந்ததாகச் சொல்லும் சூழல் ஆர்வலர்கள் அது இப்போதுவரை அப்படியே தொடர்வதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

கடந்த 2018ல் இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சுனாமி வந்தது. அதில் இருந்தும் தப்பிய முதலையால் கழுத்தில் கிடக்கும் டயரில் இருந்து மட்டும் விடுபடவே முடியவில்லை. இப்படியான சூழலில்தான் இந்தோனேசியாவை சேர்ந்த இயற்கை உயிர்கள் பாதுகாப்பு அமைப்பு ஒரு போட்டியை அறிவித்து இருக்கிறது. அதாவது கழுத்தில் டயரோடு வலம் வரும் அந்த முதலையில் கழுத்தில் இருந்து டயரை விடுவித்தால் பெரும் தொகை பரிசாக வழங்கப்படுமாம். அதேநேரம் அந்த முயற்சியில் முதலைக்கு காயம் எதுவும் ஏற்படக் கூடாதாம்.

போட்டிக்கு பல இளைஞர்கள் இந்தோனேஷியாவில் ஆர்வமாய் தயாராகி வருகின்றனர். ஆத்தி..பரிசைவிட உசுரு முக்கியம் சாமீ!


நண்பர்களுடன் பகிர :