சனம் ஷெட்டி டீசண்டான பொண்ணு..பிக்பாஸ் வனிதா சர்டிபிகேட்... தர்ஷனை செருப்பால் அடிப்பேன் எனவும் ஆவேசம்..! Description: சனம் ஷெட்டி டீசண்டான பொண்ணு..பிக்பாஸ் வனிதா சர்டிபிகேட்... தர்ஷனை செருப்பால் அடிப்பேன் எனவும் ஆவேசம்..!

சனம் ஷெட்டி டீசண்டான பொண்ணு..பிக்பாஸ் வனிதா சர்டிபிகேட்... தர்ஷனை செருப்பால் அடிப்பேன் எனவும் ஆவேசம்..!


சனம் ஷெட்டி டீசண்டான பொண்ணு..பிக்பாஸ் வனிதா சர்டிபிகேட்...  தர்ஷனை செருப்பால் அடிப்பேன் எனவும் ஆவேசம்..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ர தர்ஷன் அதிக அளவு மீடியா வெளிச்சத்துக்கு வந்தவர்.

பிக்பாஸ் வீட்டில் தர்ஷன், துள்ளுவதோ இளமை திரைப்பட புகழ் ஷெரினோடு நெருக்கமாக இருந்தார். அதைப் பார்த்து அவரது காதலியும், மாடல் அழகியுமான சனம் ஷெட்டி ரொம்பவே கதறினார். தொடர்ந்து தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே இனி தர்ஷனின் வாழ்வில் நான் இல்லை என பகிரங்கமாக வெளியிட்டார்.

மீண்டும் ஒருகட்டத்தில் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவே ஷெரின் தான் காரணம் எனச் சொன்னார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு சனம் ஷெட்டியை சந்திப்பதையே தர்ஷன் தவிர்ந்திருக்கிறார். இந்நிலையில் தான் மாடல் அழகி சனம் தர்ஷன் மீது சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதாவது நிச்சயம் முடித்துவிட்டு தன்னை கல்யாணம் செய்ய தர்ஷன் மறுப்பதாகத்தான் புகாரே கொடுத்திருக்கிறார்.

அந்த புகாரில் எனக்கும், தர்ஷனுக்கு கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது, இந்த ஜூனில் கல்யாணம் நடப்பதாக இருந்தது. பிக்பாஸ் வீட்டுக்கு போன தர்ஷன், நம் காதல் விசயமும், நிச்சயதார்த்தம் முடிந்ததும் வெளியில் தெரிய வேண்டாம். அப்படித் தெரிந்தால் பெண் ரசிகைகள் அதிகம் கிடைக்க மாட்டார்கள் என சொன்னார். நான் தர்ஷனுக்காக இதுவரை 15 லட்ச ரூபாய் செலவு செஞ்சுருக்கேன். ஆனால் இப்போது அவர் கல்யாணம் செய்துகொள்ள மறுக்கிறார் எனவும் கமிஷனர் ஆபிஸில் புகார் கொடுத்தார்.

தர்ஷனோ, தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஷனம் தன் முன்னாள் காதலனோடு நெருக்கமாக இருந்த ஆதாரம் இருக்கிறது. தனது படங்களில் தன்னை ஹீரோயினாக போடும்படி அழுத்தம் கொடுக்கிறார். சில தயாரிப்பாளர்களிடம் என்னைப்பற்றி தவறாக சொன்னதால் என் பட வாய்ப்புகளும் போனது என சொல்லியிருந்தார்.

இருவர் விவகாரமும் ஒருவர் மீது ஒருவர் புகார் சொல்லியே வெளிச்சத்துக்கு வந்திருக்கும் நிலையில் இதுதொடர்பாக கருத்து சொல்லி இருக்கிறார் பிக்பாஸ் வனிதா விஜயகுமார். அவர் இவ்விவகாரம் குறித்து கூறும்போது, ‘தர்ஷனை நான் பிக்பாச் வீட்டுலயே பலதடவை உரிமையோடு திட்டிருக்கேன். நாளைக்கு பார்த்தாலும் திட்டுவேன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே தர்ஷன் அவனுக்காக வெளியில் ஒரு பொண்ணு இருக்கான்னு ஒத்துகிட்டான்.

செரினும் தர்ஷனுக்காக வெளியே இருப்பதும் ஒரு ஆர்ட்டிஸ்ட் என யோசிச்சுருக்கணும். ஷனம் ஷெட்டியை நான் முதல்முறை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபோதே பார்த்தேன். ரொம்ப நல்லப்பொண்ணு. தைரியமான பொண்ணு. அவ ரொம்ப செலவு செஞ்சு தர்ஷனோடு நிச்சயம் செய்திருந்தாள். அந்த நிச்சயதார்த்த போட்டோவையெல்லாம் நான் பார்த்தேன். அதில் முட்டிபோட்டு ரோஜாப்பூ கொடுத்தார் தர்ஷன். அதில் 32 பல்லும் தெரிவதுபோல் மகிழ்ச்சியோடு இருக்கிறான்.

அஜித், சூர்யாவை எல்லாம் மக்கள் ஹீரோவாக ஏன் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? அவர்களது மனைவிக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதைதான் அதற்கு காரணம். இவர்கள் இருவரில் யார் மேல் தப்புன்னுல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா தர்ஷன் ஷனத்தின் கேரக்டர் பத்தி பேசவே கூடாது. அதுவும் கேமரா முன்னாடி பேசுறது ரொம்பத் தப்பு. அப்படி பேசுனா செருப்பால அடிச்சாலும் தப்பில்ல. ஒரு பெண்ணை புறக்கணிக்கும்போது ஏற்படும் வலி எனக்கு நல்லாத் தெரியும்.’என்று பொங்கு, பொங்கென பொங்கியுள்ளார் பிக்பாஸ் வனிதா.


நண்பர்களுடன் பகிர :