கடித்து குதறவந்த புலி... பிணம்போல் மாறிய நபர்... சோதனை செய்த புலி அடுத்து நடந்தது என்ன தெரியுமா..? Description: கடித்து குதறவந்த புலி... பிணம்போல் மாறிய நபர்... சோதனை செய்த புலி அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?

கடித்து குதறவந்த புலி... பிணம்போல் மாறிய நபர்... சோதனை செய்த புலி அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?


கடித்து குதறவந்த புலி... பிணம்போல் மாறிய நபர்...  சோதனை செய்த புலி  அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?

நண்பர்கள் இருவர் நடந்து போய்க்கொண்டிருப்பார்கள். அப்போது கரடி ஒன்று வரும். அதை பார்த்ததும் ஒரு நண்பர் மரத்தில் ஏறி தப்பித்து விடுவார். மரம் ஏறத்தெரியாத நண்பன் இறந்ததுபோல் நடிப்பான். அவன் அருகிலேயே நெருங்கி வரும் கரடி இதுபோன்ற நண்பனிடம் பழகாதே எனச் சொல்வதுபோல் ஒரு கதை நாம் பள்ளிக்காலத்தில் படித்திருக்கிறோம்.

அப்படி ஒரு சம்பவம் நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இதேபோல் மும்பையில் தன்னை தாக்க வந்த புலியிடம் இருந்து தப்பிக்க ஒருவர் இறந்ததுபோல் நடித்திருக்கிறார். முப்பை அருகில் உள்ள பாந்தரா மாவட்டத்தில் வயல்வெளியில் புலி ஒன்று பதுங்கி இருந்தது. அங்குவந்த ஒருவரை அது தாக்கவும் முயற்சித்தது.

உடனே புலியைப் பார்த்தவர் சாதுர்யமாக தரையில் படுத்துக்கொண்டு இறந்தவர்போல் நடித்திருக்கிறார். அவரை நெருங்கிவந்த புலி, இறந்ததுபோல் கிடந்தவரின் அருகிலேயே கொஞ்சநேரம் நின்றது. இதைப்பார்த்த மக்கள் சப்தம் போட்டு கத்தவே புலி பதட்டத்தில் ஓட்டம் பிடித்தது. புலி அங்கிருந்து போனதும் அந்த பிணம் போல் கிடந்த வாலிபர் எழுந்து சென்றார். கூடவே இது தனக்கு இரண்டாவது பிறவி என நெகிழ்ச்சியோடு சொல்கிறார் அவர்.


நண்பர்களுடன் பகிர :