பாண்டின் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரனின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா..? அவரே சொன்ன தகவல் இது!

முன்பெல்லாம் திரைப்பட நடிகர், நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர்கள் படை இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சீரியல் நாயகன், நாயகிகளுக்கே பெரிய ரசிகர்கள் படை வந்துவிட்டது. காரணம் வீட்டுக்கு வீடு இன்று டிவிப் பெட்டி இருக்கிறது.

அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது. அந்தவகையில் விஜய் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் பல ஜோடிகள் இருந்தாலும் அதில் மூன்றாவது ஜோடியாக வரும் கதிர், முல்லைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய கிரேஸ் உண்டு. இந்த சீரியலின் சூப்பர், டூப்பர் ஹிட்க்கு அவர்களும் காரணம்.

இந்த தம்பதிகளுக்குள் சீரியலில் காட்டப்படும் அன்னியோன்யம் ப்ரோகிராமை நிறைய மக்களிடம் சேர்த்திருக்கிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்தார்.

அதில் அவர், தன் சம்பளம் குறித்தும் மனம் திறந்துள்ளார். அதாவது அந்த சீரியலுக்காக தான் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் சம்பளமாக வாங்குவதாக சொல்லியிருக்கிறார்.