முதலிரவுக்கு பின்பு நான்கு மாதங்களாக வீட்டுக்கே வராத கணவன்.. தேடிப்போன மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..! Description: முதலிரவுக்கு பின்பு நான்கு மாதங்களாக வீட்டுக்கே வராத கணவன்.. தேடிப்போன மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முதலிரவுக்கு பின்பு நான்கு மாதங்களாக வீட்டுக்கே வராத கணவன்.. தேடிப்போன மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!


 முதலிரவுக்கு பின்பு நான்கு மாதங்களாக வீட்டுக்கே வராத கணவன்..  தேடிப்போன மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

திருமணம் முடிந்து முதலிரவு நடந்த பின் மாயமான கணவர் நான்கு மாதங்களாக வீட்டுக்கே வரவில்லை. அவரை தேடிப்போன மனைவிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பக்கத்தில் இருக்கும் கிராமம் தான் சேந்தன்குடி. இந்த ஊரை சேர்ந்த சிவநேசன், ஈரோடு, பெருந்துறையில் உள்ள தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் அசிஸ்டண்ட் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கமணி என்னும் பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டது.

இவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணமும் ஆகிவிட்டது. ஆனால் சிவநேசன் இதைத் தன் குடும்பத்தினரிடம் சொல்லாமலே வாழத்தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இப்போது 5 வயதான பெண் குழந்தையும் இருக்கிறது.

சிலவாரங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு போவதாக கூறிவிட்டு போன சிவநேசன், பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியிருக்கிறார். வீட்டிலும் பிருந்தாதேவி என்ற பெண்ணோடு நான்கு மாதங்களுக்கு முன்பு கல்யாணம் செய்து வைத்தனர். முதலிரவெல்லாம் முடித்துவிட்டு ஒருவாரத்தில் தான் வேலை செய்த கம்பெனிக்கு செல்வதாக சொல்லி விட்டு சொந்த ஊரில் இருந்து மீண்டும் ஈரோடுக்கு போனார் சிவநேசன்.

அதன்பின்னர் 4 மாதங்கள் அவர் வீட்டுக்கே செல்லவில்லை. இரண்டாவதாக அவர் திருமணம் செய்த பிருந்தாதேவியோ தன்னை எப்போது வேலை செய்யும் இடத்துக்கு கூட்டிப் போவீர்கள் என போனில் கேட்டுக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் பிருந்தாதேவியிடம் இருந்து வரும் போனையும் அவர் எடுக்காமல் இருக்க சந்தேகப்பட்டு நேடில் கணவர் வேலை செய்யும் இடத்துக்குப் போனார் பிருந்தாதேவி.

அப்போது தான் அவருக்கு தங்கமணி என்னும் மனைவியும், 5 வயதில் குழந்தையும் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து பிருந்தாதேவி போலீஸில் புகார் கொடுக்க, முதல் மனைவி இருப்பதை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த சிவநேசனை போலீஸார் கைது செய்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :