ஆயுத எழுத்து சீரியல் வில்லி மெளனிகா வாழ்வில் இவ்வளவு சோகமா? வில்லியின் நிஜவாழ்வை கேட்டால் கண்ணீரே வந்துவிடும்..! Description: ஆயுத எழுத்து சீரியல் வில்லி மெளனிகா வாழ்வில் இவ்வளவு சோகமா? வில்லியின் நிஜவாழ்வை கேட்டால் கண்ணீரே வந்துவிடும்..!

ஆயுத எழுத்து சீரியல் வில்லி மெளனிகா வாழ்வில் இவ்வளவு சோகமா? வில்லியின் நிஜவாழ்வை கேட்டால் கண்ணீரே வந்துவிடும்..!


ஆயுத எழுத்து சீரியல் வில்லி மெளனிகா வாழ்வில் இவ்வளவு சோகமா?  வில்லியின் நிஜவாழ்வை கேட்டால் கண்ணீரே வந்துவிடும்..!

சின்னத்திரையில் நடிகை மெளனிகா ரொம்ப பேமஸ். அதிலும் ஆயுத எழுத்து சீரியலில் அவர்காட்டும் வில்லத்தனம் அனைவராலும் மறக்கவே முடியாதது.

மெளனிகாவின் கலைப்பயணம் உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் ரஜினியின் சகோதிரியாக நடித்துத்தான் துவங்கியது. கடந்த 2000வது ஆண்டில் இயக்குனர் பாலுமகேந்திராவை மணம் செய்து கொண்டார் மெளனிகா. இவர் சொர்க்கம் சீரியலில் நடித்தார். அதற்காக தமிழக அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்தது.

பாலுமகேந்திராவின் மறைவுக்குப் பின்பு சினிம, சின்னத்திரையை விட்டு ஒதுங்கியே இருந்த மெளனிகா இப்போது ஆயுத எழுத்தில் வில்லியாக நடிக்கிறார். இப்போது அவர் தன் வாழ்க்கை குறித்து சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அடில், ‘என்னோட வீட்டுக்காரர் மறைவுக்கு பின்பு வாழ்க்கையே சூனியம் ஆகிட்ட மாதிரி ஒரு உணர்வு. காலம்தான் கொஞ்சம், கொஞ்சமா மீட்டு கொண்டு வந்துச்சு. பாலுமகேந்திராவின் மறைவுக்கு பின்பு எனக்கு லைப்ல பிடிப்பு உண்டாக காரணமா இருந்ததே என்னோட சகோதிரி மகள்தான்.

ஆனா என்னோட துரதிஷ்டம் என்னன்னா...அவ ஒரு ரோட் ஆக்ஸிடண்ட்ல இறந்துட்டா. எனக்கு குழந்தை இல்லாத குறையை போக்குனதே அவதான். அவ சின்னப்பிள்ளையா இருந்தகாலம் முதல் கல்யாணம் முடிஞ்சு அவளுக்கு இரண்டு பிள்ளபேறையும் கூடவே இருந்து பார்த்தேன்..ஆனா!’என்ற மெளனிகா மேற்கொண்டு பேசமுடியாமல் தடுமாறுகிறார்.

‘நாலு வருசத்துக்கு முன்னாடி என்னோட கணவர் பாலுமகேந்திராவை இழந்தப்போ என்ன கஷ்டம் பட்டேனோ அதே கஷ்டத்தை அக்கா பொண்ணு இறந்தப்போவும் அனுபவிச்சேன். இப்படியான சூழலில் தான் சண்டிவி சீரியலில் நடிக்கக் கேட்டாங்க. அவ நினைப்புல இருந்து வெளியே வரணும்ன்னு தான் நடிக்க சம்மதிச்சேன்.’என்கிறார் மெளனிகா.


நண்பர்களுடன் பகிர :