தனிமையில் இருந்த பச்சைக் குழந்தை... வேலைக்காரி செய்த படுபயங்கர செயல்.. சிசிடிவி காட்சியில் வெளியான அம்பலம்..! Description: தனிமையில் இருந்த பச்சைக் குழந்தை... வேலைக்காரி செய்த படுபயங்கர செயல்.. சிசிடிவி காட்சியில் வெளியான அம்பலம்..!

தனிமையில் இருந்த பச்சைக் குழந்தை... வேலைக்காரி செய்த படுபயங்கர செயல்.. சிசிடிவி காட்சியில் வெளியான அம்பலம்..!


தனிமையில் இருந்த பச்சைக் குழந்தை... வேலைக்காரி செய்த படுபயங்கர செயல்.. சிசிடிவி காட்சியில் வெளியான அம்பலம்..!

குழந்தைகளை வளர்ப்பது பெற்றோரின் கடமைகளில் ஒன்று. ஆனால் சிலநேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் பெற்றோர்கள் அந்த தன்மையில் இருந்து விலகிப் போக நேர்கிறது. அதிலும் குறிப்பாக பணிக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகள் எவ்வளவு துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.

சிங்கப்பூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீட்டில் ஒரு வயதேயான குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தையின் அம்மா, அப்பா இருவருமே கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார்கள். இதனால் குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு பெண்ணை வேலைக்கு வைத்திருந்தார்.

இந்நிலையில் தம்பதிகள் இருவரும் கடந்த வாரத்தில் ஒருநாள் வழக்கம்போல் வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது குழந்தையின் கையில் கொப்பளங்கள் இருந்ததைப் பார்த்து ஷாக்கானார்கள். உடனே, இதுதொடர்பாக வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டபோது, குழந்தை தெரியாமல் சூடான தண்ணீரில் கைவைத்துவிட்டதாக சொல்லி சீன் போட்டிருக்கிறார்.

பெற்றோர் உடனே குழந்தையை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குப் போனார்கள். அங்கு குழந்தையின் கையைப் பார்த்த மருத்துவர் இது யதார்த்தமாக நடந்தது போல் இல்லையே என சொல்ல...சந்தேகம் அடைந்த பெற்றோர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தார்கள்.

அப்போதுதான் வீட்டில் வேலை செய்த பெண், குழந்தையை வேண்டுமென்றே சூடான தண்ணீருக்குள் கையை முக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. குறித்த இந்த வேலையை செய்த அந்த பெண்ணை பணியில் இருந்து நீக்கியதோடு, போலீஸிலும் புகார் கொடுத்திருக்கிறார்கள் தம்பதிகள்.

எப்படிப்பட்ட மனிதர்களை வேலைக்கு வைத்திருக்கிறோம் எனத் தெரியாமலே இப்படி ஆட்களை வைத்தால் நமது குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகிவிடும்..


நண்பர்களுடன் பகிர :