நீ செத்துடுவேன்னு வடிவேலு அண்ணனே சொன்னாரு.. இரண்டாம் பிறவி எடுத்து வந்திருக்கும் நடிகர் முத்துகாளை உருக்கம்..! Description: நீ செத்துடுவேன்னு வடிவேலு அண்ணனே சொன்னாரு.. இரண்டாம் பிறவி எடுத்து வந்திருக்கும் நடிகர் முத்துகாளை உருக்கம்..!

நீ செத்துடுவேன்னு வடிவேலு அண்ணனே சொன்னாரு.. இரண்டாம் பிறவி எடுத்து வந்திருக்கும் நடிகர் முத்துகாளை உருக்கம்..!


நீ செத்துடுவேன்னு வடிவேலு அண்ணனே சொன்னாரு.. இரண்டாம் பிறவி எடுத்து வந்திருக்கும் நடிகர் முத்துகாளை உருக்கம்..!

நகைச்சுவை நடிகர் முத்துகாளையை தமிழ் திரையுலகில் தெரியாதவர்களே இருக்க முடியாது. வடிவேலுவோடு சேர்ந்து இவர் செய்த சேட்டைகள் அவ்வளவு பேமஸ். செத்து, செத்து விளையாடுவமா? என வடிவேலுவோடு காதைத்தொட ஓடும் முத்துக்காளை காமெடி ஏகபேமஸ்..

மதுபழக்கத்துக்கு அடிமையாகி இருந்த முத்துகாளை இப்போது அத்ல் இருந்து மீண்டு வந்துள்ளார். இதுகுறித்து மனம் திறந்திருக்கிறார் முத்துகாளை. அவர் சொல்வதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டர் ஆகும் கனவில் தான் சென்னைக்கு வந்தேன். ஆனால் சென்னையில் கார்பெண்டர் வேலைதான் கிடைச்சுது. பலகட்ட போராட்டங்களுக்கு பின்னால் வடிவேலு கூட்டத்தில் போண்டா மணி, வடிவேல் வாசு குழுவோடு சேர்ந்தேன். சினிமாவில் சின்ன ரோல்களில் நடிச்சுட்டு இருந்தப்பவே குடிக்கு அடிமையாகிட்டேன். நானும் அல்வா வாசுவும் அதிகமா குடிப்போம்.

வடிவேலு அண்ணன் ஒருதடவை, என்கிட்ட குடிச்சு, குடிச்சே முதல்ல அல்வா வாசு சாகப்போறான்..அடுத்து நீ தான்னு சொன்னாரு. அப்படியே அல்வா வாசு ஒருநாள் செத்துப்பொனாரு. அன்னைக்குதான் மனசுக்குள்ள வாழ்க்கை குறித்த பயம் வந்துச்சு. மதுவையும் அன்னியோட நிப்பாட்டிட்டேன். குடிக்கதை நிப்பாட்டி இப்போ ஒரு வருசம் ஆச்சு. இது எனக்கு செகண்ட் இன்னிங்ஸ் என்கிறார் முத்துகாளை.


நண்பர்களுடன் பகிர :