கெளசல்யாவை கோடீஸ்வரியாக்கிய அந்த ஒரு கேள்வி.. நடிகை ராதிகா கேட்ட ஒரு கோடிரூபாய் கேள்வி இதுதான்..! Description: கெளசல்யாவை கோடீஸ்வரியாக்கிய அந்த ஒரு கேள்வி.. நடிகை ராதிகா கேட்ட ஒரு கோடிரூபாய் கேள்வி இதுதான்..!

கெளசல்யாவை கோடீஸ்வரியாக்கிய அந்த ஒரு கேள்வி.. நடிகை ராதிகா கேட்ட ஒரு கோடிரூபாய் கேள்வி இதுதான்..!


கெளசல்யாவை கோடீஸ்வரியாக்கிய அந்த ஒரு கேள்வி.. நடிகை ராதிகா கேட்ட ஒரு கோடிரூபாய் கேள்வி இதுதான்..!

பிரபலமான அந்த தனியார் தொலைக்காட்சியில் ‘கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இது திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இது புதிர்கேள்விகளுக்கு விடை சொல்லும் சுவாரஸ்ய நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியை பிரபல திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிவருகிறார். முன்பு சன் டிவியில் இதேபோல் கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியை இவரது கணவர் சரத்குமார் நடத்தியிருந்தார். கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மொத்தம் 15 கேள்விகள் கேட்கப்படும். அதில் அனைத்து கேள்விக்கும் விடை சொன்னால் சரியாக சொன்னால் ஒருகோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்.

அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவரும் இந்த கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த கவுசல்யா கார்த்திகா(31)என்ற பெண் பங்கேற்றார். இவர் பிறவியிலேயே கேட்கும் திறன் இழந்த, வாயும் பேச முடியாதவர் ஆவார், இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட முதல் மாற்றுத்திறனாளியும் இவர்தான். தனது விடாமுயற்சியால் செவித்திறன் அற்ற..பேச முடியாதோர் பள்ளி, கல்வி நிறுவனங்களில் எம்.எஸ்.சி, எம்.பி.ஏ முடித்தார். இப்போது மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் உதவியாளராக இருக்கிறார்.

அவரிடம் கடையாக அதாவது உச்ச கேள்வியாக ஒரு கோடி ரூபாய் பரிசுக்கான கேள்வியாக எது கேட்கப்பட்டது என்பதை சேனல் நிர்வாகம் இப்போது ட்விட்டரில் பதிவு செய்துள்ளது. அதாவது..

மன்னர் இரண்டாம் புலிகேசியின் கற்பனை இரட்டை சகோதரரான நாகநந்தி என்னும் கதாபாத்திரம் 1948ல் எந்த வரலாற்று நாவலில் தோன்றுகிறது என்பதுதான் கேள்வி.

அதற்கு பார்த்திபன் கனவு, வேங்கையின் மைந்தன், சிவகாமியின் சபதம், யுவனராணி என நான்கு ஆப்சென்கள் கொடுக்கப்பட்டன. அதற்கு சிவகாமியின் சபதம் என சரியாக சொல்லியிருக்கிறார். பின்பென்ன ஒரு கோடி பரிசுத்தொகையை பெறுகிறார்.


நண்பர்களுடன் பகிர :