கோடீஸ்வரியாக மாறிய வாய்பேச முடியாத 31 வயது தமிழ்ப்பெண்.. சைகை மொழியில் பேசியது குறித்து விளக்கம்..! Description: கோடீஸ்வரியாக மாறிய வாய்பேச முடியாத 31 வயது தமிழ்ப்பெண்.. சைகை மொழியில் பேசியது குறித்து விளக்கம்..!

கோடீஸ்வரியாக மாறிய வாய்பேச முடியாத 31 வயது தமிழ்ப்பெண்.. சைகை மொழியில் பேசியது குறித்து விளக்கம்..!


கோடீஸ்வரியாக மாறிய வாய்பேச முடியாத 31 வயது தமிழ்ப்பெண்.. சைகை மொழியில் பேசியது குறித்து விளக்கம்..!

இப்போது காட்சி ஊடகங்களும், சோசியல் மீடியாவும் உச்சம் தொட்டிருக்கும் காலம் இது. இதனால் அதிர்ஸ்டக் காத்து எங்கு இருந்து, எபடி வீசும் என்பதே தெரியாது. அந்தவகையில் வாய்பேச முடியாத, செவியில் கேட்கும் திறன் இல்லாத பெண் ஒருவரை கோடீஸ்வரியாக்கி இருக்கிறது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி.





இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..’பிரபலமான அந்த தனியார் தொலைக்காட்சியில் ‘கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இது திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இது புதிர்கேள்விகளுக்கு விடை சொல்லும் சுவாரஸ்ய நிகழ்ச்சி.





இந்த நிகழ்ச்சியை பிரபல திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிவருகிறார். முன்பு சன் டிவியில் இதேபோல் கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியை இவரது கணவர் சரத்குமார் நடத்தியிருந்தார். கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மொத்தம் 15 கேள்விகள் கேட்கப்படும். அதில் அனைத்து கேள்விக்கும் விடை சொன்னால் சரியாக சொன்னால் ஒருகோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்.





அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவரும் இந்த கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த கவுசல்யா கார்த்திகா(31)என்ற பெண் பங்கேற்றார். இவர் பிறவியிலேயே கேட்கும் திறன் இழந்த, வாயும் பேச முடியாதவர் ஆவார், இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட முதல் மாற்றுத்திறனாளியும் இவர்தான். தனது விடாமுயற்சியால் செவித்திறன் அற்ற..பேச முடியாதோர் பள்ளி, கல்வி நிறுவனங்களில் எம்.எஸ்.சி, எம்.பி.ஏ முடித்தார். இப்போது மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் உதவியாளராக இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :