இதற்குப் பிறகு தான் சாரி கட்ட துவங்கினேன்... ரகசியத்தை உடைத்த பேபி அனிகா..! Description: இதற்குப் பிறகு தான் சாரி கட்ட துவங்கினேன்... ரகசியத்தை உடைத்த பேபி அனிகா..!

இதற்குப் பிறகு தான் சாரி கட்ட துவங்கினேன்... ரகசியத்தை உடைத்த பேபி அனிகா..!


இதற்குப் பிறகு தான் சாரி கட்ட துவங்கினேன்... ரகசியத்தை உடைத்த பேபி அனிகா..!

பேபி அனிகாவுக்கு இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் அறிமுகமே தேவையில்லை. தல அஜித்தின் மகளாக விஸ்வாசம், என்னை அறிந்தால் என இரண்டு படங்களில் நடித்ததாலேயே படி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் அனிகா.

அதிலும் உனக்கென்ன வேண்டும் சொல்லு..உலகத்தை காட்டச் சொல்லு என தலயோடு சேர்ந்து மகளாக சுற்றும் பாடலில் வெகுவாக ஈர்ப்பார் அனிகா. இதேபோல் விஸ்வாசம் படத்திலும் அஜித்_அனிகாவின் அப்பா மகள் ஹெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும். அனிகா இப்போது இயக்குனர் கெளதம் மேனன் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்வை மையமாகக் கொண்ட ‘குயின்’ வெப் சீரியலில் நடிக்கிறார்.

இதில் அனிகா சின்ன வயது ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இவர் ஜெயலலிதா பாத்திரத்துக்கு நடத்திய போட்டோ சூட் இணையத்தில் வைரலான நிலையில் அதுகுறித்து ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் அனிகா. அதில், ‘குயின் சீரியலில் தான் முதன் முதலில் புடவை கட்டினேன்.

தொடக்கத்தில் சேலை கட்ட பிடிக்கவில்லை. மற்ற உடைகளை அணிவதுபோல் அதில் வசதியில்லை. ஆனால் ஸ்கிரீனில் என்னைப் பார்த்தபோது எனக்கே ரொம்ப அழகாக இருப்பதாக தோன்றியது. அதனால் இப்போது அடிக்கடி சேலை கட்டத் தொடங்கிட்டேன்.’என்கிறார் அனிகா.


நண்பர்களுடன் பகிர :