செம ஸ்டைலாக இங்கிலீஸ் பேசும் பிச்சைக்காரர்... மிரண்டு போன போலீஸார்.. விசாரணையில் வெளியான உண்மை..! Description: செம ஸ்டைலாக இங்கிலீஸ் பேசும் பிச்சைக்காரர்... மிரண்டு போன போலீஸார்.. விசாரணையில் வெளியான உண்மை..!

செம ஸ்டைலாக இங்கிலீஸ் பேசும் பிச்சைக்காரர்... மிரண்டு போன போலீஸார்.. விசாரணையில் வெளியான உண்மை..!


 செம ஸ்டைலாக இங்கிலீஸ் பேசும் பிச்சைக்காரர்... மிரண்டு போன போலீஸார்.. விசாரணையில் வெளியான உண்மை..!

அம்மா தாயே..என திரும்பத் திரும்ப சொல்லத் தெரிந்துவிட்டால் மட்டும் போதும். பிச்சையெடுக்க அதுதான் தகுதி. திரைப்படம் ஒன்றில் நடிகர் விவேக் நகைச்சுவைக்காக ஐ ஏம் பேக்கர் பாய் எனபிச்சையெடுப்பார். இப்போது அதை மெய்பிக்கும் வகையில் ஒரு பிச்சைக்காரர் முழுக்க ஆங்கிலத்தில் பேசி பிச்சை எடுக்கிறார்.

கிரிஜா சங்கர் மிஸ்ராவுக்கு 51 வயது ஆகிறது. இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜகன்னாதன் கோயில் வாசலில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். நேற்று இவருக்கும் ஒரு ஆட்டோக்காரருக்கும் திடீர் சண்டை ஏற்பட்டது. உடனே ஸ்பாட்க்கு வந்த போலீஸார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துப் போனார்கள். அப்போது இருவரிடமும் கம்ளைய்ண்ட் எழுதிக் கேட்டார்கள்.

உடனே இருவரும் புகார் எழுதிக்கொடுக்க அதில் சங்கர் மிஸ்ரா தெளிவான ஆங்கிலத்தில் பிழையின்றி எழுதியிருந்தார். கூடவே ஸ்டேசனில் விசாரணையின் போதும் சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். அப்போதுதான் சங்கரின் தந்தை ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எனவும், சங்கரும் பொறியியல் படித்துவிட்டு நல்ல வேலையில் இருந்தவர் என்பதும் தெரியவந்தது.

ஆனாலும் போலீஸார் துருவி, துருவி கேட்டும் அவர் ஏன் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தார் என்பதை சங்கர் சொல்லவே இல்லை. தொடர் விசாரணையில் பணியில் இருக்கும்போது மூத்த அதிகாரி ஒருவருக்கும், சங்கருக்கும் பிரச்னை இருந்தது. அவர் அந்த பயத்திலேயே இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து சங்கருக்கு அதே அழுத்தத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :