சீரியலில் வில்லி.. நிஜத்தில் பச்ச குழந்தை.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத ரோஜா சீரியல் நடிகை..! Description: சீரியலில் வில்லி.. நிஜத்தில் பச்ச குழந்தை.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத ரோஜா சீரியல் நடிகை..!

சீரியலில் வில்லி.. நிஜத்தில் பச்ச குழந்தை.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத ரோஜா சீரியல் நடிகை..!


 சீரியலில் வில்லி.. நிஜத்தில் பச்ச குழந்தை..  மேடையில் கண்ணீர் விட்டு அழுத ரோஜா சீரியல் நடிகை..!

திரைப்பட நடிகைகளைவிட மிக எளிதாக சீடியல் நடிகர், நடிகைகள் மக்கள் மனதில் பளிச்சென பதிந்து விடுகிறார்கள். முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் ரசிகர் மன்றங்கள் இருந்தது. இப்போதெல்லாம் சீரியலில் நடிப்போருக்கும் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர்கள் படை இருக்கிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சிரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் ஷாமிலி வில்லியாக நடித்து பேமஸானவர். இந்த சீரியலில் எதிர்மறை கேரக்டரால் இவர் புகழின் உச்சத்துக்கே போனார்.

அண்மையில் சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் ரோஜா சீரியல் வில்லியான ஷாமிலிக்கும் இதில் விருதுகள் வழங்கப்பட்டது. ஷாமிலி 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். ரோஜாவில் வில்லியாக நடித்திருந்தாலும் மற்ற நாடகங்களில் நேர்மறையான பாத்திரத்திலேயே நடித்திருந்தார் ஷாமிலி.

இந்நிலையில் சன் குடும்ப விழாவில் சிறந்த வில்லி நடிகைக்கான விருதுக்கு தன் பெயர் அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுது விட்டார் ஷாமிலி. கூடவே அவர் மேடையில் என் அம்மா சீரியல் பார்த்துட்டு அவுங்க நல்லா நடிச்சுருக்காங்க. இவுங்க நல்லா நடிச்சுருக்காங்கன்னு சொல்லுவாங்க. ஒருநாளுகூட நீ நல்லா நடிச்சுருக்கண்ணு சொன்னதே இல்லை. சீரியலில் தான் நான் வில்லி. நிஜத்தில் குழந்தை’ என சொல்லி கண்ணீரைத் துடிக்க கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது.


நண்பர்களுடன் பகிர :