ப்ரியா பவானி ஷங்கரிடம் காதலில் விழுந்தாரா எஸ்.ஜே.சூர்யா? காண்டாகி எஸ்.ஜே.சூர்யா என்ன பதில் சொன்னார் பாருங்க..! Description: ப்ரியா பவானி ஷங்கரிடம் காதலில் விழுந்தாரா எஸ்.ஜே.சூர்யா? காண்டாகி எஸ்.ஜே.சூர்யா என்ன பதில் சொன்னார் பாருங்க..!

ப்ரியா பவானி ஷங்கரிடம் காதலில் விழுந்தாரா எஸ்.ஜே.சூர்யா? காண்டாகி எஸ்.ஜே.சூர்யா என்ன பதில் சொன்னார் பாருங்க..!


ப்ரியா பவானி ஷங்கரிடம் காதலில் விழுந்தாரா எஸ்.ஜே.சூர்யா?   காண்டாகி எஸ்.ஜே.சூர்யா என்ன பதில் சொன்னார் பாருங்க..!

90ஸ் கிட்ஸ்களின் பேவரட் இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. இளைய தளபதியை விஜயை வைத்து ‘குஷி’, அஜித்தை வைத்து ‘வாலி’ என மெகா ஹிட் படங்களை இயக்கியவர். சிம்ரனுக்கு ஜோடியாக நியூ படத்தில் நடித்து நடிகனாகவும் கால் பதித்தார். அந்த பெரும்பயணத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இப்போதும் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார்.

40 வயதைக் கடந்த எஸ்.ஜே.சூர்யா இன்னும் திருமணமே செய்துகொள்ளவில்லை. அண்மையில் எலிக்கு பயப்படும் கேரக்டரில் இவர் நடித்த மான்ஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். இப்போது இதே ஜோடி மீண்டும் ராதாமோகன் இயக்கத்தில் ‘பொம்மை’ படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர்.

இதை மையமாக வைத்து எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கரிடம் காதலை சொல்லிவிட்டதாக ஒரு குரூப் கிளப்பிவிட்டது. கூடவே ப்ரியா அதை நிராகரித்து விட்டதாகவும் சொல்லிவிட்டனர். இதனால் காண்டான எஸ்.ஜே.சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் இதப்பற்றி எழுதியிருக்கிறார்.

. அதில், ‘இது முட்டாள் யாரோ கிளப்பிவிட்ட வேலை. அவர் எனது தோழி மட்டுமே..மான்ஸ்டர் காலம் தொட்டே அவர் எனக்கு நல்ல தோழி. தய்வு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள்’ எனவும் அதில் கேட்டுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவின் இந்த ட்விட்டர் பதிவு செம வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :