இரவு பாலோடு மஞ்சள் சேர்த்து குடித்தால் உடலில் நடக்கும் அதிசயம்..! Description: இரவு பாலோடு மஞ்சள் சேர்த்து குடித்தால் உடலில் நடக்கும் அதிசயம்..!

இரவு பாலோடு மஞ்சள் சேர்த்து குடித்தால் உடலில் நடக்கும் அதிசயம்..!


இரவு பாலோடு மஞ்சள் சேர்த்து குடித்தால் உடலில் நடக்கும் அதிசயம்..!

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது கிராமப்பகுதிகளில் இப்போதும் வழக்கத்தில் இருக்கும் விசயம் தான். அதன் பின்னால் மிகப்பெரிய அறிவியல் உண்மை ஒளிந்திருக்கிறது.

அப்படி பாலில் மஞ்சல் கலந்து குடித்தால் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தோல், சிறுகுடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமலும் இது காக்கும். கூடவே புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

புற்றுநோய் பாதிப்பினால் எடுத்துக்கொண்ட கீமோதெரபியின் பக்கவிளைவையும் போக்கும். கூடவே வைரஸ், பாக்டீரியாக்களுக்கு எதிராக மஞ்சள் போராடும். இதனால் சளி, இருமல், தொண்டைவலி என சகல பிரச்னைகளையும் போக்கும். அதனால்தான் கிராமங்களில் தொண்டை சரியில்லை என்றாலே பாலில் மஞ்சள் கலந்து குடிக்கின்றனர்.

மஞ்சள் கலந்தபால் கீழ் வாதத்தை போக்குவதோடு சைனஸ் பிரச்னையையும் தீர்க்கும். தசை, எலும்பு வலியை குறைக்கும். ஏற்கனவே பாலில் நிரம்பி இருக்கும் கால்சியம் மூட்டு வலியை குறைத்து எலும்பை பலப்படுத்தும். இதேபோல் சருமப் பிரச்னைகளுக்கு மஞ்சள் கலந்த பாலில் பஞ்சை நனைத்து தடவினால் குணம் சீக்கிரமாகும்.

அதேபோல் ரத்தநாளத்தை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றும். ஹார்மோன் குறைபாட்டையும் சரிசெய்யும். பெண்களுக்கு மாதவிடாய்கால வலியையும் மஞ்சள் குறைக்கும். மஞ்சள் கலந்த பால் தலைவலி உள்ளிட்ட பிரச்னையை தீர்ப்பதோடு, செரிமான மண்டலத்தையும் சீராக்கும். சரி இந்த மஞ்சள் பாலை எப்படி செய்வது என்று கேட்கிறீர்களா?

ஒரு கிளாஸ் பாலில் கால் ஸ்பூன் மஞ்சளைக் கலந்து பாலை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து அதை வடிகட்டி, தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து இளம் சூடாக குடித்தால் நன்றாக இருக்கும். சிலருக்கு பாலைக் குடித்ததும் உடம்பில் அரிப்பு வரும். அப்படி வந்தால் உடல் ஒத்துழைக்கவில்லை என்பதை புரிந்துகொண்டு நிறுத்திவிட வேண்டும்.

எதையும் அளவாக சாப்பிட்டாதான் மருந்து. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அதனால் தினமும் இதை ஒரு கிளாஸ் தான் குடிக்க வேண்டும்.


நண்பர்களுடன் பகிர :