வெறும் 1 தடவை தேய்த்தால்... முகத்தில் கருவளையம் முதல் முகப்பரு வரை அத்தனையும் போய்விடும்...! Description: வெறும் 1 தடவை தேய்த்தால்... முகத்தில் கருவளையம் முதல் முகப்பரு வரை அத்தனையும் போய்விடும்...!

வெறும் 1 தடவை தேய்த்தால்... முகத்தில் கருவளையம் முதல் முகப்பரு வரை அத்தனையும் போய்விடும்...!


வெறும் 1 தடவை தேய்த்தால்... முகத்தில் கருவளையம் முதல் முகப்பரு வரை அத்தனையும் போய்விடும்...!

தங்கள் முகம் அழகாகவும், பிரகாசமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் நினைப்பாக இருக்கும். ஆனால் சிலருக்கு கண்ணின் கீழ் கருவளையம், முகப்பரு, தழும்பு என ஏதாவது ஒன்று இருந்து அவர்களின் முக அழகுக்கு வேட்டு வைத்து விடுகிறது. அவர்களும் பல க்ரீம்களை உபயோகப்படுத்திவிட்டு சோர்ந்து போய் விடுகிறார்கள்.

அவர்கள் ஒரேஇரவில் இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட்டு அழகாக மாற சூப்பர் டிப்ஸ் இதோ..இந்த டிப்ஸ் வெயிலில் வெளியில் போவோருக்கும், சருமம் கருப்பாக மாறி பாதிக்கப்படுவோருக்கும் ஹெல்பாக இருக்கும்.

இதற்கு முதலில் ஒரு பவுலை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் ஆலிவேரா ஜெல் எடுக்கவேண்டும். கற்றாழை செடியே கிடைத்தால் நல்லது. இதோடு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்க்க வேண்டும்.

இதனோடு இரண்டு ஸ்பூன் பாதாம் பேஸ்டையும் சேர்க்க வேண்டும். பாதாம் பேஸ்ட் தயாரிக்க ராத்திரியே தண்ணீரில் பாதாமை ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த பாதாமை தோல்நீக்கி, ஒரு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்தால் பாதாம் பேஸ்ட் தயாராகிவிடும். இந்த கலவையையும் நாம் முன்னரே எடுத்துவைத்த பவுலில் இரண்டு ஸ்பூன் சேர்க்க வேண்டும்.

இதனோடு ஒரு ஸ்பூன் அரிசிமாவையும் சேர்க்க வேண்டும். இப்போது இந்த கலவையை நன்றாக கலக்க வேண்டும். இதை பயன்படுத்தும்முன் குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாகக் கழுவி சுத்தமாகத் துடைக்க வேண்டும். அதன் பின்னர் இந்த பேஸ்டை பிரஸ்ஸால் முகத்தில் தேய்த்துவிடுங்கள். இந்த பேக்கை 40 நிமிடங்கள் முகத்தில் விட்டு பின்பு கையால் அப்புறப்படுத்துங்கள். இதை வாரம் இருமுறை செய்தாலே உங்கள் முகம் பொலிவு பெற்றுவிடும்.


நண்பர்களுடன் பகிர :