நா.முத்துகுமாரின் மகன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் பொங்கல் பண்டிகைக்காக அவர் எழுதிய முதல்கவிதை இதோ..! Description: நா.முத்துகுமாரின் மகன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் பொங்கல் பண்டிகைக்காக அவர் எழுதிய முதல்கவிதை இதோ..!

நா.முத்துகுமாரின் மகன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் பொங்கல் பண்டிகைக்காக அவர் எழுதிய முதல்கவிதை இதோ..!


 நா.முத்துகுமாரின் மகன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் பொங்கல் பண்டிகைக்காக அவர் எழுதிய முதல்கவிதை இதோ..!

நா.முத்துகுமார் இல்லாத திரையுலகம் இன்னும் வெறிச்சோடிப்போய் தான் இருக்கிறது. அவரது வார்த்தை பலத்துக்கு ஈடுசெய்யும் இன்னொருவர் இன்னும் கூட உருவாகவே இல்லை. ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்னும் வரிகளை பார்க்கும் போது, இப்போது கேட்டாலும் முத்துகுமாரின் வெறுமை நம்மை வாட்டும்.

நா.முத்துகுமாரின் மகன் ஆதவன் 7ம் வகுப்பு படிக்கிறான். இவன் இந்த சின்னச்சிறு வயதில் பொங்கல் பண்டிகைக்காக கவிதை ஒன்று எழுதி இருக்கிறான். புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பார்கள். அந்தவகையில் இவரது இந்த கவிதைத் தொகுப்பை பார்க்கும் போது அது எவ்வளவு உண்மை எனத் தெரிகிறது.

இணையத்தில் தீயாய் பரவிவரும் அந்த கவிதையை, அந்த செல்லச் சிறுவனின் கையெழுத்திலேயே படித்துப் பாருங்கள். இதோ..

உழவர்களை அண்ணாந்து பாரு..

உலகத்தில் அன்பை சேரு

அவர்களால் தான் நமக்கு கிடைக்குது சோறு..

அவர்கள் இல்லையென்றால் சோற்றுக்கு பெரும்பாடு!

என்று ஒரு கவிதை நீள்கிறது.

இன்னொரு கவிதையானது..

வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு

நீ உன் வேட்டியை தூக்கிக்கட்டு என நீள்கிறது.

இதேபோல் காணும் பொங்கலை மையப்படுத்தி...

‘உறவினர்கள் வந்தார்களா என்று பாரு உலகத்தில் நல்ல நண்பர்களை சேரு’ என தொடங்கும் கவிதையை எழுதியிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :