40 வயதை தாண்டுகிறீர்களா? இனி இந்த பொடியை சேர்க்க மறக்காதீங்க...! Description: 40 வயதை தாண்டுகிறீர்களா? இனி இந்த பொடியை சேர்க்க மறக்காதீங்க...!

40 வயதை தாண்டுகிறீர்களா? இனி இந்த பொடியை சேர்க்க மறக்காதீங்க...!


  40 வயதை தாண்டுகிறீர்களா?   இனி இந்த பொடியை சேர்க்க மறக்காதீங்க...!

40 வயது தாண்டித்தான் மூட்டுவலி தொடங்கி, இதய நோய் அபாயம் வரை எட்டிப் பார்க்கிறது. ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் எட்டிப் பார்க்கும் பருவமும் இதுதான். இந்த நேரத்திஒல் இந்த நோய்களைக் கடக்க நமக்கு கொஞ்சம் விழிப்புணர்வு இருந்தாலே போதும்.

சுக்குக்கு மிஞ்சுன மருந்தும் இல்லை...சுப்பிரமணிக்கு மிஞ்சுன தெய்வமும் இல்லை என கிராமப்பகுதிகளில் ஒரு பழமொழி சொல்வார்கள். காரணம் சுக்கில் அந்த அளவுக்கு மருத்துவத் தன்மை இருக்கிறது.சுக்கு முக்கியமாக வலிகளையும் போக வைத்துவிடும். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

கழுத்து வலி, பாதம்வலி, முதுகு வலி, இடுப்பு வலி இதெயெல்லாம் தொடர்ந்து பீல் செய்தால் உங்களுக்கு எலும்பு தேய்மானம் பிரச்னை வந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இதற்கு சிறுநீரகப் பிரச்னையே காரணம். அது கழிவுகளை சரியாக வெளியேற்றாமல் ஒவ்வொரு மூட்டிலும் கொண்டுபோய் சேர்த்துவிடும். அதனால் தான் இப்படி வலி வருகிறது.

இப்படி மூட்டுகளில் வந்து தங்கும் கழிவுகள் தான் யூரிக் அமிலம் என சொல்லப்படுகிறது. இந்த யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்கும்போது எலும்பு தேய ஆரம்பிக்கும். இதை இயற்கையான முறையிலேயே சரிசெய்ய சூப்பரான ஒரு ஐடியா உள்ளது. அதுவும் இதற்கு வீட்டில் இருக்கும் பொருள்களே போதும்.

தேவையானவை...

மிளகு, சீரகம், சுக்கு(காய்ந்த இஞ்சி)

செய்முறை

மிளகை நன்றாக பொடிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மிளகு பொடியை மூன்று ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். சீரகப்பொடி ஆறு ஸ்பூனும், சுக்கைப் பொடி செய்து, 6 ஸ்பூனும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்க வேண்டும்.

இந்த கலவையில் இருந்து அரை ஸ்பூன் மட்டும் எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் தண்ணீரில் கலக்க வேண்டும். இதை காலையில் சாப்பாடு சாபிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும். இதேபோல் மதியம், இரவிலும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பு இதை குடிக்க வேண்டும். இதை மூன்றுநாள் குடித்தாலே உங்கள் உடலில் இருக்கும் வலிகள் போய்விடும். இதன் மூலம் உங்கள் சிறுநீரகமும் நன்கு செயல்படும்.

இதேபோல் தீராத தலைவலிக்கு சுக்கை நீரில் உரசி அதை பற்றுப் போட்டால் போய்விடும். இதேபோல் அஜீரணப் பிரச்னைக்கு ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பில் இருந்து இறக்கி நீரில் 1 ஸ்பூன் சுக்குப் பொடியைக் கடந்து மூடி வைக்க வேண்டும். அது ஆறிய பின்னர் அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடித்தால் வயிற்று வலி, விலா பகுதியின் குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு ஆகியவை நீங்கும். இதேபோல் சுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பல் துலக்கினால் வாய் துர்நாற்றம் போய்விடும்.

40 வயதுக்கு மேலானவர்கள் உணவில் சுக்கை சேர்த்தால் வாத நோய், மலச்சிக்கல், ஆஸ்துமா வராது. சுக்கை தட்டி பாலோடு சேர்த்து அரைத்து மூட்டுகளுக்கு பற்றுப்போட்டால் மூட்டுவலி போகும். சுக்கை வெங்காயத்துடன் அரைத்து சாப்பிட்டால் வயிற்றுப்பூச்சிகள் அழியும். உடலின் நச்சுகள் வெளியேறிவிடும். இதேபோல் சுக்கு காபி குடித்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

இனி சுக்கைப் பார்த்தால் விட்டு விடாதீர்கள்...


நண்பர்களுடன் பகிர :