முப்பது வருடமாக குழ்ந்தை இல்லை.. சாவில்கூட பிரியாத பாசக்கார தம்பதி... உருகவைக்கும் பாசப் பதிவு..! Description: முப்பது வருடமாக குழ்ந்தை இல்லை.. சாவில்கூட பிரியாத பாசக்கார தம்பதி... உருகவைக்கும் பாசப் பதிவு..!

முப்பது வருடமாக குழ்ந்தை இல்லை.. சாவில்கூட பிரியாத பாசக்கார தம்பதி... உருகவைக்கும் பாசப் பதிவு..!


முப்பது வருடமாக குழ்ந்தை இல்லை.. சாவில்கூட பிரியாத பாசக்கார தம்பதி...   உருகவைக்கும் பாசப் பதிவு..!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஆனால் எல்லாருக்கும் அப்படியானா மனைவி அமைந்து விடுவதில்லை. இன்றைய அவசர யுகதில் திருமணம் நடக்கும் வேகத்தில் விவாகரத்து அதிகரித்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்த இணை பிரியா தம்பதி ஆச்சர்யம் அடைய வைத்து உள்ளனர்.

முத்துபேட்டை அருகில் உள்ள ஓவரூர் கிராம் சோதிரியம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு 60 வயது ஆகிறது. இவரது மனைவி 55 வயதான இந்திரா.

இவர்களுக்கு திருமணம் முடிந்து முப்பது ஆண்டுகள் ஆகிறது. ஆனால் பிள்ளைகள் இல்லை. ஆரம்பத்தில் இதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்ட தம்பதிகள் ஒரு கட்டத்தில் அதில் இருந்து மீண்டு வந்தனர். ஒருவருக்கு ஒருவர் மிகவும் பாசமாக வாழ்ந்து வந்தனர். எங்கு போனாலும் இருவரும் சேர்ந்து தான் போவார்கள்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இந்திராவுக்கு திடிர் என நெஞ்சு வலி வந்தது. உடனே கணவர் நாகராஜ் உள்பட உறவுகள் சேர்ந்து அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனார்கள். தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு கூட்டிப் போனார்கள். அங்கு பரிதாபமாக உயிர் இழந்தார் இந்திரா.

இதை கண்முன்னே பார்த்த அவரது கணவர் நாகராஜ் மயங்கி விழுந்தார். அடுத்த சில நிமிடங்களில் அவரும் பரிதாபமாக உயிர் விட்டார்.

குழந்தைகள் இல்லாமல் மிகவும் நேசித்து வாழ்ந்த இருவரையும் ஒன்றாக அடக்கம் செய்தார்கள் உறவுகள். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.


நண்பர்களுடன் பகிர :