மகள் வேலைக்கு போறான்னு நினைச்சோம்.. வட நாட்டு இளைனருடன் காதல்..? நடுக்காட்டில் அரைநிர்வாணமாக கிடந்த காதல் ஜோடிகள்.. ஈரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…! Description: மகள் வேலைக்கு போறான்னு நினைச்சோம்.. வட நாட்டு இளைனருடன் காதல்..? நடுக்காட்டில் அரைநிர்வாணமாக கிடந்த காதல் ஜோடிகள்.. ஈரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

மகள் வேலைக்கு போறான்னு நினைச்சோம்.. வட நாட்டு இளைனருடன் காதல்..? நடுக்காட்டில் அரைநிர்வாணமாக கிடந்த காதல் ஜோடிகள்.. ஈரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!


மகள் வேலைக்கு போறான்னு நினைச்சோம்.. வட நாட்டு இளைனருடன் காதல்..?  நடுக்காட்டில் அரைநிர்வாணமாக கிடந்த காதல் ஜோடிகள்..  ஈரோட்டில் நடந்த  பகீர் சம்பவம்…!

ஈரோடு மாவட்டத்தில் நடுக்காட்டில் காதல் ஜோடி ஒன்று அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஈரோடு மாவட்டத்தின் அடுத்த வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சுகன்யா. இவர் பெருந்துறையில் உள்ள சிப்காட்டில் இயங்கிவரும் மில்லில் வேலை செய்துவருகிறார். இவரோடு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜாசோபாண்ட் பெகரா என்னும் இளைஞர் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் தொடக்கத்தில் நட்பாக பழகினர்.

ஒருகட்டத்தில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இந்த விவகாரம் வீட்டுக்குத் தெரியவர சுகன்யா வீட்டில் பிரச்னை வெடித்தது. இந்நிலையில் இனிமேல் காதல் தவறை செய்ய மாட்டேன் என வீட்டில் சத்தியமெல்லாம் செய்துவிட்டு மில்லுக்கு வேலைக்குப் போன சுகன்யா, அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை.

மில்லுக்குப் போய் விசாரித்ததில் சுகன்யா அன்று வேலைகு வரவே இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து ஒரிசா இளைஞர் மீது சுகன்யாவின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் இருவரையும் தேடிவந்த நிலையில் காட்டுப்பகுதியில் அரை நிர்வாணத்தில் சுகன்யாவும், அவரது காதலரும் சடலமாகக் கிடந்தனர்.

முதலில் சுகன்யா தூக்குப்போட்டும், அவரது காதலர் ஒரிசா வாலிபர் விஷம் குடித்தும் இறந்ததாக போலீஸர் கருதினர். ஆனால் அங்கு சில தடயங்கள் கிடைத்தது. கூடவே சுகன்யாவின் நகைகள், செல்போனும் மாயமாகி இருந்தது. இதனால் காதல் ஜோடியை பணம், நகைக்காக யாரும் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.


நண்பர்களுடன் பகிர :