கதறி கதறி அழுத சிறுவன்... காரணம் தெரிஞ்சா நீங்களும் குலுங்கி, குலுங்கி சிரிப்பீங்க..! Description: கதறி கதறி அழுத சிறுவன்... காரணம் தெரிஞ்சா நீங்களும் குலுங்கி, குலுங்கி சிரிப்பீங்க..!

கதறி கதறி அழுத சிறுவன்... காரணம் தெரிஞ்சா நீங்களும் குலுங்கி, குலுங்கி சிரிப்பீங்க..!


கதறி கதறி அழுத சிறுவன்... காரணம் தெரிஞ்சா நீங்களும் குலுங்கி, குலுங்கி சிரிப்பீங்க..!

சின்னக் குழந்தைகளின் உலகம் எப்போதுமே அலாதியானது. அவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அந்தவகையில் இப்போது ஒரு சிறுவன் அழும் வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

தன் தந்தையின் முன்னால் போய் நின்று சிறுவன் ஒருவன் அழுதுகொண்டிருக்கிறான். எதுக்கு அழுகுற? என அனுசரணையாய் கேட்கிறார் பொடியனின் தந்தை. உடனே தன் தம்பி கிள்ளியதாகச் சொல்லி நிறுத்தாமல் அழுகிறான் சிறுவன்.

ஆனால் அந்த தம்பியோ இன்னும் குப்புறக் கூட கவிழாத பிறந்து இருபது நாளே ஆன கைக்குழந்தை..!

இதைக்கேட்டு அப்பா ஷாக்காக..இவன் தாப்பா வில்லன் என அவனைக் காட்டி மீண்டும் அழுகிறான் பொடியன்.

உடனே சிறுவனின் அப்பாவும் விளையாட்டாக..டேய் பேரெ வைக்காத தம்பி..இனிமே அவனை அடிச்ச...பிறந்த இருபது நாளுல உன்னோட சேட்டையைப் பாத்தியா? அடிச்சு பிச்சுடுவேன்..’என பேசுகிறார்.

சிறுவனோ தொடர்ந்து அழுதுகொண்டே செம பெர்பாமன்ஸ் செய்துகொண்டு தம்பி தன்னை படுத்துக்கொண்டே கிள்ளியதாகச் சொல்கிறான்.

அட வீடியோவை பாருங்கள்..100 சதவிகிதம் சிரிப்பு கியாரண்டி..


நண்பர்களுடன் பகிர :