67 வது வயதில் முதலாளியின் மனைவியை கரம் பிடித்த நபர்... பின்னணியில் நடந்தது என்ன தெரியுமா..? Description: 67 வது வயதில் முதலாளியின் மனைவியை கரம் பிடித்த நபர்... பின்னணியில் நடந்தது என்ன தெரியுமா..?

67 வது வயதில் முதலாளியின் மனைவியை கரம் பிடித்த நபர்... பின்னணியில் நடந்தது என்ன தெரியுமா..?


67 வது வயதில் முதலாளியின் மனைவியை கரம் பிடித்த நபர்... பின்னணியில் நடந்தது என்ன தெரியுமா..?

கேரளம் எப்போதுமே ஆச்சர்யங்களால் சூழ்ந்தது. சில மாதங்களுக்கு முன்னர் கொல்லத்தில் விதவைத்தாய்க்கு மகனே திருமணம் செய்துவைத்து நெகிழ வைத்தார். இதோ இப்போது முதியோர் இல்லத்தில் 60 வயதைக் கடந்த இருவயோதிகர்கள் காதலித்து கல்யாணம் செய்து இருக்கிறார்கள்.

கேரளத்தின் திருச்சூர் மாவட்டம், ராமவர்மபுரத்தில் அரசு முதியோர் இல்லம் இருக்கிறது. இங்கு லெட்சுமி என்று ஒரு பாட்டி தங்கி இருந்தார். 65 வயதான அவர் தனது கணவரும், சமைய கலைஞருமான கிருஷ்ணய்யரின் மறைவுக்கு பின்பு, சொந்தக்காரர்கள் சிலர் வீட்டில் தங்கி இருந்தார். அங்கே இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அரசு அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இருமாதங்களுக்கு முன்பு இதே ஆசிரமத்துக்கு கோச்சானியன் என்ற 67 பெரியவர் வந்து சேர்ந்தார். இவரைப் பார்த்தது லெட்சுமி ஷாக்கானார்.காரணம், கிருஷ்ணய்யரிடம் அதாவது லெட்சுமியின் கணவரிடம் கோச்சானியன் உதவியாளராக இருந்தவர். கூடவே, கிருஷ்ணய்யர் சாகுவதற்கு முன்னர், தன் மனைவியை தன் காலத்துக்கு பின்பு நன்றாக பார்த்துக்கொள்ளும்மாறும் கோச்சானியனிடம் சொல்லி இருக்கிறார். அவரும் அப்படியே அடிக்கடி வந்து பார்த்து வேண்டிய உதவிகளை சொல்லியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் தான் தனியாக வசித்து வந்த வீட்டை லெட்சுமி விற்றுவிட்டு சொந்தக்காரர் இல்லத்துக்கு போய்விட்டார். அதன் பின்ன்ர் இருவரும் சில ஆண்டுகள் சந்தித்து கொள்ளவில்லை. இந்நிலையில் இப்போதைய சந்திப்பு நடந்திருக்கிறது. அப்போதே இருவடும் பேசி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ய, ஆசிரமத் தரப்பினர் கல்யாண ஏற்பாடுகளை செய்தனர்.

இதில் கேரள மாநில அமைச்சர் சுனில்குமார் உள்ளிட்ட பல விஜபிக்களும் கலந்துகொண்டனர். இப்போது இதே முதியோர் காப்பகத்தில் இந்த தம்பதிக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.


நண்பர்களுடன் பகிர :