ஜோதிடத்தால்தான் அம்மாவும் அப்பாவும் பிரிந்தார்கள் - மனோரமாவின் மகன் உருக்கம்..! Description: ஜோதிடத்தால்தான் அம்மாவும் அப்பாவும் பிரிந்தார்கள் - மனோரமாவின் மகன் உருக்கம்..!

ஜோதிடத்தால்தான் அம்மாவும் அப்பாவும் பிரிந்தார்கள் - மனோரமாவின் மகன் உருக்கம்..!


ஜோதிடத்தால்தான் அம்மாவும் அப்பாவும் பிரிந்தார்கள் - மனோரமாவின் மகன் உருக்கம்..!

தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை, குணச்சித்திரம் என சகலகலாவல்லவராக வலம் வந்தவர் நடிகை மனோரம்மா. இவரது ஒரே மகன் பூபதி. இவட் மகேந்திரனின் இயக்கத்தில் உதிரிப்பூக்கள் படத்தில் நாயகினி தம்பியாக சினிமாவில் எண்ட்ரி ஆனார்.

குடும்பம் ஒரு கதம்பம் உள்பட 20 படங்களில் நடித்திருக்கும் பூபதிக்கு ராஜராஜன் என்னும் மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ராஜராஜன் காஞ்சிபுரத்தில் மருத்துவராக உள்ளார். இந்நிலையில் தன் அம்மா குறித்து அண்மையில் நெகிழ்ச்சியோடு சில விசயங்களை பகிர்ந்திருக்கிறார் ஆச்சி மனோரம்மாவின் மகன் பூபதி. ‘என் அம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் என்னை வயிற்றில் சுமந்துகொண்டு நாடக மேடைகளில் நடித்திருக்கிறார். அம்மாவின் பேச்சு, நடிப்பை பார்த்துவிட்டு திமுகவின் கட்சி பிரச்சார நாடகங்களிலும் நடிக்க வைத்தார்கள்.

இதில் உதயசூரியன் நாடகத்தில் கலைஞருக்கு ஜோடியாக கன்னண்ணா என்னும் கேரக்டரில் என் அம்மா நடித்திருந்தார். நான் பிறந்ததும் என்னோட அப்பா ராமநாதன் ஜோசியரிடம் ஜாதகத்தை காட்டி இருக்கிறார். அந்த ஜோசியக்காரர் இவன் அம்மாவை பெரிய உச்சத்துக்கு கொண்டு போயிட்டு, அப்பாவை விழுங்கிவிடும் ஜாதகம் எனச்சொல்ல அதை முழுதாக நம்பிக்கொண்டு என் அப்பா, அம்மாவை விட்டுப் பிரிந்தார்.

இப்போது நினைத்தால் கூட அப்பா அம்மாவை பிரிந்தது வலிக்கிறது. இதற்கு மாற்றாக அவர் என்னை அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு அம்மாவோடு சேர்ந்து இருந்திருக்கலாமே என்றும் தோன்றுகிறது. அம்மா மனோரம்மாவிடம் அவரது ஞாபகசக்தியைப் பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். அம்மாவுக்கு என்னை டாக்டராக்கிப் பார்க்க ஆசை ஆனால் பி.யூ.சியில் பிரெஞ்சு மொழியை எடுத்துப் படித்ததால் எனக்கு டாக்டர் சீட் கிடக்கவில்லை. அதனால் பி.எஸ்.சி படித்தேன். என்கிறார்.


நண்பர்களுடன் பகிர :