ஒரே மணப்பந்தலில்... 271 ஜோடிக்கு கல்யாணம்.. இந்த கல்யாணத்துக்கு பின்னால் நெஞ்சை உலுக்கும் காரணம்..! Description: ஒரே மணப்பந்தலில்... 271 ஜோடிக்கு கல்யாணம்.. இந்த கல்யாணத்துக்கு பின்னால் நெஞ்சை உலுக்கும் காரணம்..!

ஒரே மணப்பந்தலில்... 271 ஜோடிக்கு கல்யாணம்.. இந்த கல்யாணத்துக்கு பின்னால் நெஞ்சை உலுக்கும் காரணம்..!


ஒரே மணப்பந்தலில்... 271 ஜோடிக்கு கல்யாணம்..  இந்த கல்யாணத்துக்கு பின்னால் நெஞ்சை உலுக்கும் காரணம்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ நீண்ட நாள்களாக வரன் தேடிக்கொண்டே இருக்கும் பலரைப் பார்த்திருப்போம். வியாழன் நோக்கு வந்தால் வாழ்க்கைத்துணை தானாகவே தேடி வந்துவிடும் என ரிலாக்ஸ்டாக ஈஸி சேரில் அமர்ந்து கொள்பவர்களும் உண்டு.

எது எப்படியாயினும் திருமணம் என்பதே சொர்க்க நிகழ்வுதான். இப்படியான சூழலில் குஜராத்தின் வைர வியாபாரி ஒருவர் ஒரே மேடையில் 271 ஏழை இளம்பெண்களுக்கு திருமணம் செய்துவைக்க இருக்கிறார். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியை சேர்ந்த மகேஷ் சவானி அந்த சுற்றுவட்டாரத்தில் மிகவும் பேமஸான வைரவியாபாரி. இவர் தான் நேற்று இப்படியொரு கல்யாணத்தை நடத்தி முடித்திருக்கிறார். இந்த 271 பெண்களும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள்.

சிலர் தாய், தந்தையரை இழந்தவர்கள். 5 பேர் இஸ்லாமியர்கள். அதில் ஒருவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். மகாராஷ்டிரத்தில் இருந்து ஐந்துபெண்களும், உத்தரப்பிரதேசத்தில் இருந்து இரு பெண்களும், ஜார்கண்ட், ஒடிசாவில் இருந்து தலா ஒரு பெண்களும் உள்ளனர்.

மகேஷ் சவானி இப்படி ஏழைப்பெண்களை தேடிப்பிடித்து கல்யாணம் செய்துவைப்பது இது முதல்முறை கிடையாது. கடந்த 2012ல் இருந்து இதை செய்கிறார். அப்போது முதன் முறையாக 23 ஏழைப்பெண்களுக்கு கல்யாணம் செய்துவைத்தார். 8வது ஆண்டாக நடப்பாண்டில் நேற்று, தந்தை இல்லாத 271 குழந்தைகளுக்கு இந்த உதவியை வழங்கி இருக்கிறார்.

எப்படி இப்படி சேவை செய்பவராக மகேஷ் சவானி மாறினார்? இதோ அந்த பிண்ணனியையும் படித்துவிடுங்கள். ‘கடந்த 2008ல் இவரது தூரத்து உறவுக்காரர் ஒருவர் அவரதுமகளின் கல்யாணத்துக்கு நாள் குறித்தார். அதற்கு நிதி திரட்டி வந்த நிலையில் அது முடியாமல் போக தற்கொலை செய்துகொண்டாராம்.

இது தெரிய வந்ததும், மகேஷ் சவானி தான் அந்த பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்தாராம். அப்போது முதலே தந்தையை இழந்த வசதி இல்லாத பெண்களை தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்துவைக்கத் தொடங்கி விட்டார் மகேஷ் சவானி. இதுவரை 3172 கல்யாணங்களை நடத்தி வைத்திருக்கிறார்..வாரே வாவ்...நீங்களும் இவரை வாழ்த்தலாமே...


நண்பர்களுடன் பகிர :