கல்யாணம் முடிந்த 3வது நாளில் நடந்த சம்பவம்.. பொண்டாட்டியை கைது செய்யச்சொல்லும் மாப்பிள்ளை.. என்ன நடந்தது தெரியுமா? Description: கல்யாணம் முடிந்த 3வது நாளில் நடந்த சம்பவம்.. பொண்டாட்டியை கைது செய்யச்சொல்லும் மாப்பிள்ளை.. என்ன நடந்தது தெரியுமா?

கல்யாணம் முடிந்த 3வது நாளில் நடந்த சம்பவம்.. பொண்டாட்டியை கைது செய்யச்சொல்லும் மாப்பிள்ளை.. என்ன நடந்தது தெரியுமா?


கல்யாணம் முடிந்த 3வது நாளில் நடந்த சம்பவம்..  பொண்டாட்டியை கைது செய்யச்சொல்லும் மாப்பிள்ளை.. என்ன நடந்தது தெரியுமா?

திருமணம் என்பது இருமனம் இணையும் அற்புதமான வைபோகம். அதனால்தான் நல்லநேரம், நல்லநாள் என பார்த்து, பார்த்து திருமணத்துக்கு நாள் குறிக்கிறார்கள். சொந்த, பந்தங்களை அழைத்துப்பேசி இன்னார் தான் மாப்பிள்ளை, இதுதான் மணப்பெண் என ஊர் அறிய பிரகடனப்படுத்தி திருமணம் செய்கிறார்கள். ஆனால் இங்கே ஒரு திருமணம் வாலிபர் ஒருவரை நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். உத்திரபிரதேச மாநிலத்தின் அசம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம். இவரது மகன் பிரவீனுக்கும், இளம் பெண் ஒருவருக்கும் கடந்த மூன்றுநாள்களுக்கு முன்னர் கல்யாணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் நேற்று முன் தினம் பிரவீன் தன் மனைவியோடு, தன் சொந்த வீட்டுக்கு வந்தார். இவர்களோடு இவர்களுக்கு திருமணத்தை நடத்திவைத்த தரகர் டிங்குவும் வந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு பிரவீனின் மனைவி, கணவர் குடும்பத்துக்கு உணவு சமைத்து பரிமாறி இருக்கிறார். உணவை சாப்பிட்ட கணவர் குடும்பத்தினர் மயங்கினர். காலையில் கண் விழித்துப் பார்த்தபோது, வீட்டில் இருந்த நகை,பணத்தோடு பிரவீனின் மனைவியும், தரகர் டிங்குவும் மாயமாகி இருந்தனர். நிலவரத்தை அவர்கள் புரிந்து கொண்டு, பிரவீனின்மனைவி தங்களை ஏமாற்றியதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தனர்.

என் மனைவி ஏழை குடும்பம்ன்னு தரகர் சொன்னதை நம்பி 4 லட்சம் செலவு செஞ்சு கல்யாணம் பண்ணுனேன். அவளுக்கு நகைசெய்யவும் தரகருக்கு பணம்கொடுத்தேன். ஆனால் இப்படி தரகரும், மனைவியும் சேர்ந்து ஏமாத்திட்டாங்க. இரண்டுபேரையும் கைதுசெய்யணும். என பிரவீன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :