சீரியலில் மட்டுமல்ல.... நிஜத்திலும் வில்லிதான்... மலைக்க வைக்கும் நடிகை மகாலட்சுமியின் மறுபக்கம்....! Description: சீரியலில் மட்டுமல்ல.... நிஜத்திலும் வில்லிதான்... மலைக்க வைக்கும் நடிகை மகாலட்சுமியின் மறுபக்கம்....!

சீரியலில் மட்டுமல்ல.... நிஜத்திலும் வில்லிதான்... மலைக்க வைக்கும் நடிகை மகாலட்சுமியின் மறுபக்கம்....!


சீரியலில் மட்டுமல்ல....  நிஜத்திலும் வில்லிதான்...  மலைக்க வைக்கும் நடிகை மகாலட்சுமியின் மறுபக்கம்....!

காதல் புனிதமானதுதான். வீட்டில் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களை விட காதல் திருமணங்கள் சாதிமத ஒழிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுவே அடுத்தவர் கணவரை காதலித்தால்? இப்படிப்பட்ட ஒரு கள்ளக்காதல் விவகாரத்தால் கதிகலங்கிப் போய் உள்ளது சீரியல் வட்டாரம்.

பிரபல தொலைக்காட்சியில் வெளியாகி வரும் தேவதையைக் கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடிக்கும் ஈஸ்வரும், வில்லியாக நடிக்கும் மஹாலட்சுமியும் காதலிக்கத் துவங்கியிருக்கிறார்கள் ஆனால் இவர்கள் இருவருக்குமே ஏற்கனவே திருமணம் முடிந்து குழாந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மஹாலட்சுமியை இராண்டாவது திருமணம் செய்வதற்காக தன்னையும் தன் மகளையும் ஈஸ்வர் கொடுமைப்படுத்துவதாக ஈஸ்வரின் மனைவி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் ஈஸ்வரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் ஈஸ்வர் மஹாலட்சுமியை திருமணம் செய்யும் நோக்கத்தில் தன் மனைவியை கொடுமைப்படுத்தியது அவரின் சொத்துக்களையும் பறித்தது தெரிய வந்தது.

இவ்விவகாரத்தால் பரபரப்பு கிளம்பியுள்ள நிலையில் மஹாலட்சுமி ஈஸ்வர் இருவருமே தங்களது வாழ்க்கைத் துணையிடமிருந்து விவாகரத்து கோரவில்லை. இவர்களால் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் பிரச்சினைதான் என்று புலம்புகின்றனர் சகநடிகர்கள்.

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் ஈஸ்வர் மகாலட்சுமிக்கு கவுரவ செயற்குழு உறுப்பினர் பதவியை வாங்கிக்கொடுத்துள்ளார். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தன் செல்போனை ஆஃப் செய்து விட்டு தலைமறைவாக இருக்கிறார் மகாலட்சுமி. விரைவிலேயே சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று புதிய ஆளைக் காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


நண்பர்களுடன் பகிர :