விஜயகாந்த் மகனுக்கு கல்யாணம்.... பொண்ணு யார் தெரியுமா ?? Description: விஜயகாந்த் மகனுக்கு கல்யாணம்.... பொண்ணு யார் தெரியுமா ??

விஜயகாந்த் மகனுக்கு கல்யாணம்.... பொண்ணு யார் தெரியுமா ??


விஜயகாந்த் மகனுக்கு கல்யாணம்....  பொண்ணு யார் தெரியுமா ??

தமிழத்திரையுலகில் தனக்கான ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். ஒருகாலத்தில் இவர் நடித்த அத்தனை திடைப்படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான நடிகராக இருந்தார்.

நடிப்புக்கு மத்தியில் அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த விஜயகாந்த் அவரது ரசிகர்களால் கேப்டன் என அன்பாக அழைக்கப்படுகிறார். தேமுதிக எனும் இயக்கத்தை துவங்கி அதன் தலைவராகவும் திகழ்கிறார். மிகக்குறுகிய காலத்தில் அரசியலிலும் கோலோச்சிய அவர் அண்மையில் உடல் நலமின்மையால் பெரிதாக அரசியல் மேடைகளிலும் விழாக்களிலும் காண முடிவதில்லை.

விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் விஜயகாந்தைப் போல அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இளைய மகன் சண்முகப் பாண்டியன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகனுக்கு கோவையில் வைத்து திருமண நிச்சயம் நிகழ்ந்துள்ளது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க உள்ளார் ஜூனியர் கேப்டன். இந்த நிகழ்வில் இரு குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். கேப்டன் வீட்டு மருமகளின் புகைப்படம் இதுதான்.


நண்பர்களுடன் பகிர :