வேலூரில் அனகோண்டா பாம்பு சுற்றுவதாக பரபரப்பு... பகீர் கிளப்பும் வீடியோ.. எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்..! Description: வேலூரில் அனகோண்டா பாம்பு சுற்றுவதாக பரபரப்பு... பகீர் கிளப்பும் வீடியோ.. எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்..!

வேலூரில் அனகோண்டா பாம்பு சுற்றுவதாக பரபரப்பு... பகீர் கிளப்பும் வீடியோ.. எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்..!


வேலூரில் அனகோண்டா பாம்பு சுற்றுவதாக பரபரப்பு...  பகீர் கிளப்பும் வீடியோ.. எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்..!

திரைப்படங்களில் பாம்பு படம் என்றாலே நமக்கு ‘அனகோண்டா’ தான் நினைவுக்கு வரும். அதேபோல ஒரு பாம்பு, குடியாத்தம் பகுதியில் சுற்றிவருவதாக சமூகவலைதளத்தில் வீடீயோ ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் குடியாத்தை அடுத்த தமிழக_ஆந்திர மாநில எல்லை பகுதியில் மோர்தானா அணை உள்ளது. தற்போது ஆந்திரத்தில் பெய்துவரும் கனமழையினால் மோர்தானா அணையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மழையின் காரணமாக மலைப்பகுதிகளில் இருந்து வடிந்தோடி வரும் தண்ணீரில் பாம்பு உள்ளிட்ட ஜீவராசிகளும் ஓடிவந்து விடுகிறது. இந்நிலையில் அணையின் பின்பகுதியில் காட்டுப்பகுதியில் மலைபாம்பு ஒன்று குட்டை போன்று தேஙி இருந்த தண்ணீரில் கிடந்தது.

அதை வீடியோ எடுத்த சில வாலிபர்கள் மலைபாம்பின் மீது கல்லை தூக்கி வீசுகிறார்கள். இதனைத் தொடர்ந்து அது மெல்ல ஊர்ந்து செல்கிறது. ஆனால் அது ஏற்கனவே அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்றை விழுங்கியிருந்ததால் அசைய முடியாமல் கிடந்தது. குடியாத்தம் பகுதியில் இதை அனகோண்டா பாம்பு என போட்டு வைரலாக்கி விட்டனர்.

உடனே இதுகுறித்து விளக்கம் அளித்த வனத்துறை, ‘’இது அனகோண்டா பாம்பு இல்லை. பெரிய சைஸ் மலைபாம்பு. விறகு வெட்டவோ, ஆடு, மாடு மேய்க்கவோ தனியாக இந்த காட்டுப்பகுதிக்கு போக வேண்டாம்”என எச்சரித்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :