பட வாய்ப்புக்காக இப்படி மாறிட்டாரா..? - கயல் ஆனந்தியை பார்த்து வியக்கும் ரசிகர்கள்..! Description: பட வாய்ப்புக்காக இப்படி மாறிட்டாரா..? - கயல் ஆனந்தியை பார்த்து வியக்கும் ரசிகர்கள்..!

பட வாய்ப்புக்காக இப்படி மாறிட்டாரா..? - கயல் ஆனந்தியை பார்த்து வியக்கும் ரசிகர்கள்..!


பட வாய்ப்புக்காக இப்படி மாறிட்டாரா..? - கயல் ஆனந்தியை பார்த்து வியக்கும் ரசிகர்கள்..!

திரைத்துறையில் முன்பெல்லாம் கவர்ச்சிக்கென்று தனியான நடிகைகள் இருந்தார்கள். சில்க் சுமிதா, ஹேமமாலினி, ஏன் நமீதா காலம் வரை அது தொடர்ந்தது. ஒருகட்டத்தில் நாயகிகளே கவர்ச்சி வேடம் கட்டி கல்லா கட்டத் துவங்கினார்கள். இதனால் இப்போதெல்லாம் நாயகிக்கான தகுதியில் நடிப்பைத்தாண்டி, கவர்ச்சியும் ஒரு அங்கமாகிவிட்டது.

கயல் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்தவர் ஆனந்தி. கயல் ஆனந்தி என்றே அறியப்படும் இவர், தொடர்ந்து திரிஷா இல்லைன்னா நயன்தாரா, பொறியாளன், சண்டிவீரன், பரியேறும்பெருமாள் என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். த்ரிஷா இல்லைன்னா நயன் தாரா படம் பற்றி அப்போது ஒரு பேட்டியில் சொன்ன கயல் ஆனந்தி, அந்த படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் எனக்கு இருந்த பெயரை டேமேஜ் செய்துவிட்டனர். எனக்கு கவர்ச்சி செட்டாகாது. காரணம் என் உடல்வாகு அப்படி!

கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என கதை சொல்லும்போது சொல்லவில்லை. படப்பிடிப்பின் போதே சொல்கிறார்கள் என்றெல்லாம் ஆதங்கப்பட்டார் ஆனந்தி. தொடர்ந்து கவர்ச்சி என்னிடம் தடைதான் என குட்பை சொல்லி, அதை ஸ்ட்ரிட்டாக மெயிண்டைன்னும் செய்ததால் தமிழ்த்திரையுலகில் பிசியாக இருந்த ஆனந்தி, அடுத்தடுத்து படவாய்ப்பு இல்லாமல் போனார்.

இந்நிலையில் தற்போது ‘ஏஞ்சல்’ என்னும் படத்தில் பேயாக நடித்து வருகிறார் ஆனந்தி. கவர்ச்சிக்குத்தடை போட்ட ஆனந்தி, பேயாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டாரே என ஆனந்தியின் ரசிகர்கள் தவிக்கின்றனர். இண்டஸ்ட்ரியில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆனந்திக்கு இந்த நிலையா?


நண்பர்களுடன் பகிர :