டாக்டர் பிரியங்காவை கொன்ற கொலையாளி... நள்ளிரவில் வீட்டுக்கு வந்து சொன்ன விசயம்... விளக்கிய தாய்..! Description: டாக்டர் பிரியங்காவை கொன்ற கொலையாளி... நள்ளிரவில் வீட்டுக்கு வந்து சொன்ன விசயம்... விளக்கிய தாய்..!

டாக்டர் பிரியங்காவை கொன்ற கொலையாளி... நள்ளிரவில் வீட்டுக்கு வந்து சொன்ன விசயம்... விளக்கிய தாய்..!


டாக்டர் பிரியங்காவை கொன்ற கொலையாளி... நள்ளிரவில் வீட்டுக்கு வந்து சொன்ன விசயம்... விளக்கிய தாய்..!

ஒட்டுமொத்த தேசத்தையும் டாக்டர் பிரியங்கா விவகாரம் உலுக்கி இருக்கிறது. ஹைதராபாத்தின் ஸ்காட்நகர் பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவர்தான் பிரியங்கா ரெட்டி. கடந்த வியாழக்கிழமை காலை இங்குள்ள ஒருபாலத்தின் அடீல் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார் பிரியங்கா.

போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ சோதனை செய்ததில் அவர் கற்பழித்து கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை செய்த போலீஸார் முகமது பாஷா, ஜோலுஷிவா, ஜோலு நவீன், சின்ன கேஷவலு என நான்கு பேரை கைது செய்தனர். இவர்கள் லாரி ஓட்டுனர், கிளீனராக உள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான முகமதுவின் பெற்றோர் சில விசயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்னிக்கு ராத்திரி ஒருமணிக்குத்தான் என்பையன் முகமது வீட்டுக்கு வந்தான். ஒரு ஸ்கூட்டி மேல, லாரி மோதி ஆக்சிடண்ட் ஆகிடுச்சு. அதனால்தான் வர லேட்ன்னு சொல்லிட்டு தூங்க போனான்.

அவனை பிரியங்காவை எரிச்சு, கற்பழிச்சு கொன்னதா போலீஸ் கைது செஞ்சப்போ முதலில் எங்களுக்கு ஒன்னுமே புரியல. முகமதுவோட அரெஸ்ட் ஆகிருக்க மூணுபேரும் அடிக்கடி அவனைத்தேடி வீட்டுக்கு வருவாங்க..’’எனச் சொல்லியிருக்கிறார். என் பையன் நல்லவனாத்தான் இருந்தான். ஒருவேளை இதை அவன் செஞ்சுருந்தா இதுதான் அவன் பண்ணுன முதல் தப்பா இருக்கும் என சொல்லி அழுதிருக்கிறார் முகமதுவின் அப்பா.

கூடா நட்பு இப்படித்தான் கேடாய் முடியும்!


நண்பர்களுடன் பகிர :